மாங்காய் ரசம் மற்றும் மாங்காய் சட்னி பண்ணலாம் வாங்க!

மாங்காய் ரசம்
மாங்காய் ரசம்

ம்மரில் வெயிலை தாங்க முடியாவிட்டாலும், மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் நிறைய வாங்கி சாப்பிடலாம். மாங்காயை நம் உணவில் சேர்த்து கொள்வதால் உள்ள பலன்கள் என்னவென்றால், மாங்காயில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இது அனிமியா, ரத்த சம்மந்தமான பிரச்னை ஆகியவற்றைப் போக்கும். இது ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையினை அதிகரிக்கும். புது ரத்த செல்களையும் உருவாக்கும். இத்தனை பலன்களை கொண்ட மாங்காவை வைத்து இன்னைக்கு சில ரெசிபீஸ் வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

மாங்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

மாங்காய்-1

பச்சை மிளகாய்-3

உப்பு- தேவையான அளவு

கருவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு.

மஞ்சள் தூள்-சிறிதளவு.

பெரிய வெங்காயம்-1

வெல்லம்-சிறுதுண்டு.

கடுகு-1/4 தேக்கரண்டி.

சீரகம்-1/4 தேக்கரண்டி.

வரமிளகாய்-1

எண்ணெய்- தேவையான அளவு.

மாங்காய் ரசம் செய்முறை விளக்கம்;

முதலில் பெரிய மாங்காய் ஒன்றை எடுத்து கொண்டு நெருப்பில் சுட்டு எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 3 பச்சை மிளகாயையும் சுட்டு எடுத்துவிட்டு மாங்காவை தோலுரித்து சின்ன துண்டுகளாக வெட்டி கொண்டு பச்சை மிளகாயையும் சிறிதாக வெட்டி இப்போது இது இரண்டையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் அரைத்து வைத்திருக்கும் பேஸ்ட்டை சேர்த்து அத்துடன் ஒரு கப் தண்ணீரை ஊற்றி உப்பு தேவையான அளவு, வெல்லம் சிறுதுண்டு, நறுக்கிய வெங்காயம்1, கொத்தமல்லி சிறிதளவு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து இத்துடன் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சிறிது ஊற்றி கடுகு, சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் ஊற்றி கின்டி பரிமாறவும். சுவையான மாங்காய் ரசம் தயார். நீங்களும் வீட்டிலே செய்து பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.

இனிப்பான மாங்காய் பச்சடி (சட்னி)!

மாங்காய் பச்சடி
மாங்காய் பச்சடிImage credit - youtube.com

மாங்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

மாங்காய்-3

கடுகு-1/4 தேக்கரண்டி.

சீரகம்-1/4 தேக்கரண்டி.

வரமிளகாய்-1

சக்கரை-1கப்

மிளகாய் தூள் 1 தேக்கரண்டி

வெந்தயம்-1/4 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

மாங்காய் சட்னி செய்முறை விளக்கம்:

முதலில் 3 மாங்காயை நன்றாக தோலுரித்து சின்ன துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் ஃபேனை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், வரமிளகாய் 1, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து அத்துடன் சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் மாங்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
அக்ஷய திரிதியை ஸ்பெஷல் மா, பலா பாயாசம் மற்றும் கல்கண்டு பொங்கல் செய்யலாம் வாங்க!
மாங்காய் ரசம்

இதில் தண்ணீர் 1 கப் சேர்த்து மூடி போட்டு நன்றாக வேக விடவும். இதில் 1 கப் சக்கரை சேர்த்து நன்றாக கின்டவும். இப்போது இதை பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும். சுவையான இனிப்பு, புளிப்பு, காரம் என்று எல்லா சுவைகளும் கலந்த மாங்காய் சட்னி தயார். இதை பிரியாணியுடன் கூட சேர்த்து தொட்டு கொள்வதற்கு பரிமாறலாம். நீங்களும் வீட்டிலே ஒருமுறை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com