டீன்னா இது தான் டீ!

டீன்னா இது தான் டீ!

காபி, டீயின் சுவைக்கு அடிமை ஆகாதவர்கள் இங்கு யாரும் இல்லை. அன்றாட வாழ்வில் நாம் குடிக்கும் டீயை மிகவும் ருசியாக செய்து பருக சில டிப்ஸ்.

டீயில் பல வகைகள் உண்டு. இஞ்சி டீ, மசாலா டீ, பிளைன் டீ, பிளாக் டீ, ஏலக்காய் டீ என விதவிதமாக செய்து ருசிக்கலாம். காபியை போல் இதனை ரொம்ப திக்காக போட்டால் ருசிக்காது. டீ தண்ணியாக இருந்தால்தான் சுவையாக இருக்கும். அதுவும் டீக்கு சர்க்கரை சிறிது கூடுதலாக இருந்தால் சூப்பர் சுவையில் இருக்கும். 

சிலர் பாலில் தேவையான அளவு தண்ணீர் விட்டு அதிலேயே டீ தூள், சர்க்கரை சேர்த்து மொத்தமாக அடுப்பில் வைத்து கொதித்ததும் வடிகட்டி கொடுப்பார் கள். ஆனால் அம்சமான டீ போட முதலில் (இரண்டு பேருக்கு அளவு செல்கிறேன்) 1/2 க ப் நீரை அடுப்பில் வைத்து அது கொதி வரும்போது 2 ஸ்பூன் டீத்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு நிமிடம் கொதிக்க விட வேண்டும். டீயின் எஸன்ஸ் நன்கு இறங்கியதும் ஒரு கப் டீக்கு இரண்டு ஸ்பூன் வீதம் நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பொங்க பொங்க காய்ச்சிய பால் விட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து தட்டை போட்டு மூடி விடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து அதனை வடிகட்டி பரிமாற சுவை அலாதியாக இருக்கும். நிறம் ,மணம் ,குணம் அனைத்தும் பர்ஃபெக்டாக இருக்கும்.

இஞ்சி டீ:

ருமையான இஞ்சி டீ தயாரிக்க ஒரு துண்டு இஞ்சியை தோல் சீவி கேரட் துருவலில் துருவி அல்லது நன்கு நசுக்கி கொதிக்கும் டீ தண்ணீரில் சேர்க்க வேண்டும். நன்கு கொதி வந்ததும் காய்ச்சிய பால், சர்க்கரை சேர்த்து கொதித்ததும் வடிகட்டி பருக சூப்பர் இஞ்சி டீ தயார்.

எந்த டீ தயாரிப்பதாக இருந்தாலும் டீ தூள் சேர்த்து, மசாலா பொருட்களையும் சேர்த்த பின் நன்கு கொதிக்க  விட்டால் தான் அதன் எஸன்ஸ் நன்கு இறங்கி டீயின் சுவை அதிகரிக்கும். பாலை அளவாக சேர்த்து அவரவர் தேவைக்கேற்ப சர்க்கரையை சேர்க்கலாம். பொதுவாக டீக்கு சக்கரை சிறிது தூக்கலாக இருந்தால் தான் ருசியாக இருக்கும்.

ஏலக்காய் டீ:

டிப்படையில் டீ தயாரிக்க ஒரே முறையைதான் பின்பற்ற வேண்டும். டீத்தூள் நன்கு கொதிக்க வேண்டும். அத்துடன் ஏலக்காயை நன்கு நசுக்கி அல்லது பொடித்து தோலுடன் சேர்த்து கொதிக்க விட்டு தேவையான அளவு பால் , சர்க்கரை சேர்த்து நன்கு கொதித்ததும் இரண்டு நிமிடம் தட்டை போட்டு மூடி பிறகு வடிகட்டி பருக நல்ல மணம், ருசியுடன் இருக்கும்.

மசாலா டீ:

 பட்டை சிறு துண்டு, கிராம்பு 4

 ஏலக்காய்  2, இஞ்சி ஒரு துண்டு

ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பட்டை ஒரு துண்டு, கிராம்பு 4 ,பொடித்த ஏலக்காய் தோலுடன் இரண்டு, தோல் நீக்கி துருவியை இஞ்சி துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதன் எஸன்ஸ் நன்கு இறங்கியதும் பொங்க காய்ச்சிய பால், சர்க்கரை சேர்த்து மேலும் இரண்டு கொதி விட்டு வடிகட்டி பருக நன்றாக இருக்கும்.

இதேபோல் மூலிகைகளைக் கொண்டும் சுவையான டீ தயாரிக்கலாம். புதினா இலைகளை நிழலில் உலர்த்தி எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது பத்து காய்ந்த இலைகளை சேர்த்து இதே போல் டீ தயாரிக்கலாம். இதே முறையில் துளசி இலைகளை கொண்டும் துளசி டீ தயாரிக்கலாம் . மருத்துவ குணம் நிறைந்த இந்த மூலிகை இலைகள் வாசம் கொடுப்பதுடன் நம் உடலுக்கும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com