காளான் பயன்படுத்தி செய்யப்படும் சுவையான மூன்று ரெசிபிகள்!

பருப்பு காளான் பர்கர்
பருப்பு காளான் பர்கர்www.taste.com.a
Published on

காளானில் நார் சத்துகள், புரதசத்துகள் ஆகியவை உள்ளன. மேலும் இதில் குறைவான கொழுப்பே உள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் காளானை சுவையாக செய்து சாப்பிடலாம். காளான் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

பருப்பு காளான் பர்கர்:

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு சிறிது சிறிதாக வெட்டிய வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். அதனுடன் இரண்டு கிராம்பு, பூண்டு, ½ செ.மீ அளவில் வெட்டிய காளானை சேர்க்கவும். இரண்டு  நிமிடங்கள் கிண்டிவிட்டு வினிகர் சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை சுட வைக்கவும்.

கலவை காய்களுடன் பருப்பு பயன்படுத்தி நன்றாக அரைக்க வேண்டும்.

கடாயில் முன் செய்த காளான் கலவை மற்றும் இந்த பருப்பு கலவை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.  அதனுடன் மீதம் இருக்கும் பருப்பு, உப்பு, மிளகு மற்றும் 2 டேபில் ஸ்பூன் மைதா மாவு பயன்படுத்தி நன்றாக கலக்க வேண்டும். அதனை பர்கர் நடுவில் வைப்பதற்கு வட்ட வடிவில் செய்து வைக்க வேண்டும்.

பின்னர் பன்களை எடுத்து நெய்யில் இரு பக்கமும் சுட வைத்து எடுத்த பிறகு, இரண்டு பன்களுக்கு நடுவில் காளான் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

க்ரீம் காளான் பாஸ்தா:

க்ரீம் காளான் பாஸ்தா
க்ரீம் காளான் பாஸ்தாwww.youtube.com

டாயில் நீரைக் கொதிக்க வைத்து அதில் பாஸ்தா சேர்த்து நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும். பாஸ்தா கொதித்தவுடன் தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் வெங்காயம், மிளகாய், குடை மிளகாய் ஆகியவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் உப்பு சேர்க்கவும். அதனுடன் இப்போது காளான் சேர்த்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்கவும். பின்னர் துளசி மற்றும் ஆர்கேனா சேர்த்து கலக்கிவிட்டு மைதா மாவு சேர்த்த பின் அதனுடைய வாசனைப் போகும் வரை கிண்டிவிடவும். பின்னர், பால் ஊற்றி கெட்டியாகும் வரை நன்கு கிண்டிவிடவும். அதனுடன் வடிகட்டிய பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளரவும்.

இதனை ஒரு பேக்கிங் டிஷில் ஊற்றி அதன்மேல் சீஸ் தடவ வேண்டும். அடுப்பில் வைத்து ஒரு 15 முதல் 20 நிமிடம் வரை சமைத்தப்பின்னர் சூடாக பரிமாரவும்.

காளான் பீட்சா:

காளான் பீட்சா
காளான் பீட்சாwww.allrecipes.com

காளானை நன்றாகக் கழுவி 15 நிமிடம் உலரவைத்த பின் நறுக்கவும்.

கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து காளானை ஒரு நிமிடம் வறுக்கவும். அதனுடன் ¼ கரண்டி மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

1 டீஸ்பூன் வெண்ணெய்யை பீட்சா பேஸ் (Pizza base) மீது தடவவும். அதன்மேல் பீட்சா சாஸ் தடவ வேண்டும். பின்னர் அரைத்த சீஸை சமமாகப் பரப்பவும். பின் அதன் மேலே வறுத்த காளான்கள், குடை மிளகாய், ஆர்கனோவை வைக்கவும். அதனை அப்படியே எடுத்து ஒரு கடாயில் வைத்து மூடி வைத்து சுட வைக்க வேண்டும். அடித்தளம் நன்றாக வெந்தப்பின்னர் 5 நிமிடங்கள் கழித்து எடுத்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். அதன் மேல் நறுக்கிய வெங்காயம் மற்றும் மிளகாய் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Pizza base செய்யும் முறை:

முதலில் 40 முதல் 43C வரை கொதிக்க வைத்த நீரை தனியாக வைத்துக்கொண்டு, அதில் 3 கிராம் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து 10 முதல் 12 நிமிடங்கள் வரை கலக்க வேண்டும். சிறிது நேரத்தில் நுரை வரும். அப்படி வரவில்லையென்றால் எதோ தவறு நடந்திருக்கிறது என்று அர்த்தம். மீண்டும் செய்வது போல் ஆகிவிடும்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ சக்கரத்தை காதணியாக அணிந்த அம்பிகை!
பருப்பு காளான் பர்கர்

ஆகையால் கவனமாக செய்ய வேண்டும். நுரை படிந்த அந்த ஈஸ்ட் கலவையில் 2 ½ கப் கோதுமை மாவு, 1/3 தேக்கரண்டி உப்பு, 1 ½ ஆலிவ் எண்ணெய் கலக்கவும். பின்னர் 2 முதல் 3 டீஸ்பூன் வரை நீர் ஊற்றி பிசையவும். பிசுபிசுப்பாக இருந்தால் சிறிது மாவு சேர்த்துக் கொள்ளலாம். அதனை கையில் ஒட்டாத அளவிற்கு நன்றாக அடித்து பிசைந்து தட்டு வடிவில் செய்து கொண்டால், பீட்ஸா பேஸ் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com