சுவையான மூன்று வகை தீபாவளி பர்பிகள்!

Sweet Burfi...
Sweet Burfi...
Published on

கொந்தளி பர்பி:

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் _1கப்

சர்க்கரை _1/2 கப்

பால் _ ½ கப்

நெய் _2 ஸ்பூன்

ஏலக்காய் தூள் _1/2 ஸ்பூன்

கடலை மாவு  _2 ஸ்பூன்

நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் _ தேவைக்கு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து அடுப்பில் வைத்து  காய்ச்சி சர்க்கரை கரையும்வரை கலக்கவும். பின்னர் அதை வடிகட்டி எடுத்து அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து அந்த கலவையை வதக்கவும். பின்னர் கடலை மாவை தூவி கலவையை மசாலா நிலைக்கு கொண்டு வரவும். இந்த கலவையை ஒரு எண்ணெய் தடவிய அகலமான பாத்திரத்தில் ஊற்றி அதன் மேல் சிறிதாக நறுக்கிய முந்திரி, பாதாம் பருப்பு தூவி சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். கொந்தளி பர்பி தயார்.

பஞ்சபூத் பர்பி:

இது இந்தியாவில் மிக பிரபலமான  இனிப்பு வகை ஆகும்.

தேவையான பொருட்கள்:

சிறுபருப்பு மாவு _ 1 கப்

சர்க்கரை _1கப்

நெய் _1/2 கப்

மிளகுத்தூள்   _1/2 ஸ்பூன்

சோம்புத்தூள் _1/2 ஸ்பூன்

ஏதூக்காய் தூள் _1/2 ஸ்பூன்

தேங்காய் துருவல் _1/2 கப்

பாதாம், முந்திரி நறுக்கியது தேவைக்கு

செய்முறை: 

ஒரு  கடாயில் நெய்யை ஊற்றி அதில் பருப்பு மாவை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையை 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்ததும் சல்லடையில் வடிகட்டி கொள்ளவும். பின்னர்  சர்க்கரை கலவையுடன் வதக்கிய பருப்பு மாவு, த மிளகு, சோம்பு, ஏலக்காய் தூள் தேங்காய் துருவல் அனைத்தும் நன்கு கலந்து ஒரு கலவையாகி விடும். இந்த கலவையை ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி அதன் மேலே நறுக்கிய பாதாம், முந்திரியை சேர்க்கவும். பின்னர் பர்ஃபி குளிர்ந்ததும் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதன் மேல் உலர்ந்த பருப்பு மாவை தூவவும். பஞ்சபூத் பர்பி தயார்.

சுரைக்காய் பர்பி:

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் துருவல் _2 கப்

மைதா மாவு _1/2 கப்

பொட்டுக்கடலை மாவு _1/2 கப்

சர்க்கரை _2 கப்

சர்க்கரை போடாத பால்கோவா _50 கிராம்

ஏலப்பொடி _1 ஸ்பூன்

கேசரி பவுடர் _1 சிட்டிகை

நெய் _11/2 கப்

நெய்யில் வறுத்த முந்திரி _15

இதையும் படியுங்கள்:
பத்தே நிமிடத்தில் சுவையான சத்தான க்ரீமி ஹம்முஸ் சைட் டிஷ்!
Sweet Burfi...

செய்முறை:

சுரைக்காயை தோல் நீக்கி துருவி, கையால் சாற்றை பிழிந்து எடுத்த பின் இரண்டு கப் அளவு எடுத்து ஆவியில் வேக வைக்கவும். பிறகு பொட்டுக்கடலையை சிறிது வறுத்து பொடி செய்து கொள்ளவும். மைதாவை சிறிது நெய் விட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர்விட்டு கொதிக்க விடவும். கம்பி பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள மைதா மாவை சேர்க்கவும். அடுத்து பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து நன்கு கிளறவும். இரண்டும் நன்கு கலந்த பின் வேக வைத்துள்ள சுரைக்காய் துருவலையும் போட்டுக் கிளறவும். பின்பு பால்கோவா, கேசரி பவுடரையும் சேர்த்து சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும். நன்கு சுருண்டு வரும் போது ஏலப்பொடி, முந்திரி இவற்றையும் போட்டு நன்கு கிளறி நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சிறிது ஆறிய பின் துண்டுகளாக வெட்டவும். இது மிகவும் ருசியாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com