வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

Vendakkai
Vendakkai
Published on

வெண்டைக்காய் தமிழ்நாட்டு சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் ஒரு காய்கறி ஆகும். இது மற்ற காய்கறிகளை விட தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியது. வெண்டைக்காயை வழவழப்பு இல்லாமல் சமைப்பது என்பது ஒரு கலை. இந்தப் பதிவில் வெண்டைக்காயை சரியான முறையில் சமைப்பது பற்றிய சில நுணுக்கங்களை விரிவாகப் பார்க்கலாம். 

வெண்டைக்காய் என்பது குறைந்த கலோரி கொண்ட நார்ச்சத்து நிறைந்த ஒரு காய்கறி. இது வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். 

வெண்டைக்காயை சுவையாக சமைப்பதற்கு முதலில் சரியான வெண்டைக்காய் ரகத்தைத் தேர்வு செய்ய வேண்டும். மார்க்கெட்டுகளில் மிகவும் பொதுவாகக் கிடைக்கும் வெண்டைக்காய்தான் பச்சை வெண்டைக்காய்.‌ இது சிறிய மிருதுவான தோலைக் கொண்டிருக்கும். இதுவே ஊதா நிற வெண்டைக்காய் பெரிய, கடினமான தோலைக் கொண்டிருக்கும். ஆனால் இது சுவை மிகுந்தது. வெள்ளை நிற வெண்டைக்காய், பச்சை வெண்டைக்காய் போலவே மென்மையாக இருக்கும். இதைப் பயன்படுத்தி குழம்பு செய்ய நன்றாக இருக்கும். 

வெண்டைக்காய் வாங்கும்போது புதியதாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.தோல் பளபளப்பாகவும், வெம்பிப் போகாமலும் இருக்க வேண்டும்.‌ வெண்டைக்காயை வழவழப்பு இல்லாமல் சமைப்பதற்கு பல வழிகள் உள்ளன. வெண்டைக்காயை வெட்டிய பிறகு உப்பு தூவி 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும். இது வெண்டைக்காயில் இருந்து வழவழப்புத் தன்மை வெளியேறுவதைத் தடுக்கும்.‌ 

வெண்டைக்காயை வெட்டிய பிறகு நீரில் நன்றாகக் கழுவி ஈரத்தை துடைத்துவிட்டு சமைக்கவும். மேலும், அதை அதிக வெப்பத்தில் சமைத்தால் வெண்டைக்காய் விரைவாக வெந்து போய் வழவழப்பு வெளியேறாமல் தடுக்கும். வெண்டைக்காயுடன் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளை சேமித்து சமைப்பது அதன் சுவையை அதிகரிக்கும். 

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான வெண்டைக்காய் துவையல் - முருங்கைப்பூ முட்டை பொரியல் செய்யலாம் வாங்க!
Vendakkai

வெண்டைக்காய் சமையல் குறிப்புகள்: 

வெண்டைக்காயை பல வகைகளில் சமைக்கலாம். சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மிளகாய் தூள் மற்றும் கடுகு தாளிப்பு சேர்த்து வதக்கி அப்படியே சாப்பிடலாம். அல்லது பெரிய துண்டுகளாக வெட்டி தக்காளி, மிளகாய் தூள் மற்றும் கடுகு சேர்த்து குழம்பு போல வைக்கலாம். 

வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி தக்காளி, வெங்காயம், மசாலா பொடி போன்றவற்றை சேர்த்து பொரியியல் செய்து சாப்பிட சூப்பராக இருக்கும். அல்லது வெண்டைக்காயை நறுக்கி மசாலா பொடி, ரவை, முட்டை சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து பஜ்ஜி செய்தும் சாப்பிடலாம். 

மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றி நீங்களும் வீட்டில் சுவையான வெண்டைக்காய் உணவுகளைத் தயாரித்து சாப்பிடலாம். இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடல் நலத்தை மேம்படுத்திக் கொண்டு, என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com