திருநெல்வேலி சொதி குழம்பு சுவையா ஈஸியா நம்ம வீட்டிலயும் சமைக்கலாமே!

திருநெல்வேலி சொதி
திருநெல்வேலி சொதிImage credit - youtube.com

திருநெல்வேலியில் ரொம்பவே பிரபலமான சொதி குழம்பு, காய்கறிகளை வேகவைத்து தேங்காய் பால் ஊற்றி செய்வதாகும். இத்துடன் முருங்கைக்காய் சேர்ப்பதுதான் ஹைலைட். இதை திருமணங்களில் சாதத்துடன் சேர்த்து பரிமாறுவார்கள்.  இதை மாப்பிள்ளை சொதின்னு சொல்லுவாங்க.  சரி, வாங்க அத்தகைய டேஸ்டியான சொதியை எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு-1 கப்.

மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி.

பீன்ஸ்-1 கப்.

உருளை-1கப்.

கேரட்-1கப்.

முருங்கை-1

இஞ்சி -1 துண்டு.

பச்சை மிளகாய்-2

கடுகு-1/4 தேக்கரண்டி.

உளுந்து-1/4 தேக்கரண்டி.

சின்ன வெங்காயம்- ½ கப்.

கருவேப்பிலை- சிறிதளவு. கொத்தமல்லி- சிறிதளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

முதல் தேங்காய் பால்- 1 கப்.

இரண்டாம் தேங்காய் பால்-1 கப்.

உப்பு- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் 1 கப் பாசிப்பருப்பை நன்றாக கழுவி 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் போட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு குக்கரை 4 விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். பீன்ஸ் 1கப், உருளை 1கப், கேரட் 1கப், முருங்கை 1 எல்லாவற்றையும் குட்டிகுட்டியாக வெட்டி அதையும் குக்கரில் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். இப்போது மிக்ஸியில் இஞ்சி 1 துண்டு, பச்சை மிளகாய் 2 சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு ¼ தேக்கரண்டி, உளுந்து ¼ தேக்கரண்டி, சின்னவெங்காயம் ½ கப், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கியதும், அரைத்த பேஸ்ட்டை சேர்த்து 2 நிமிடம் வதக்கியதும் வேகவைத்த காய்கறிகளை சேர்த்து கின்டவும். இப்போது இத்துடன் இரண்டாவதாய் எடுத்த தேங்காய் பால் 1 கப் ஊற்றி 2 நிமிடம் வேகவைக்கவும். இப்போது வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து கின்டியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரே ஒரு கொதி வந்ததும் முதலாக எடுத்த தேங்காய் பால் 1 கப்பை சேர்த்து சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும். இதை சாதம், தோசை, இட்லியுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் ஒருமுறை வீட்டில் செய்து பார்த்துவிட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com