திருநெல்வேலி ஸ்பெஷல் - திருப்பாகம் ஸ்வீட்டும், முட்டைக்கோஸ் வடையும்!

Thirupagam recipe - Muttaikose vadai
Thirupagam recipe - Muttaikose vadaiImg Credit: Pinterest & Ann's little corner
Published on

பெரும்பாலும் திருநெல்வேலியில் நடைபெறும் அனைத்து விசேஷங்களிலும் இந்த திருப்பாகம் ஸ்வீட் பரிமாறப்படுவது வழக்கம்.

திருப்பாகம் ஸ்வீட் செய்வதற்கு தேவையான பொருட்கள் :

கடலை மாவு- ஒரு கப் 

 பால் - ஒரு கப்

 சர்க்கரை-1 1/2 கப் 

 குங்குமப்பூ- சிறிதளவு 

 முந்திரிப் பருப்பு -1/2 கப் 

நெய் -5 டேபிள்ஸ்பூன் 

 பச்சைக் கற்பூரம் -1(சிறிதளவு )

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கடலைமாவை போட்டு நிறம் மாறாத அளவுக்கு மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடலை மாவு நன்றாக ஆறியவுடன் அதனை நன்கு சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கடலைமாவை போட்டு அதனுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து  சிறு சிறு கட்டிகள் இல்லாத அளவுக்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும். முந்திரிப் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். குங்குமப்பூவை  சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி கலந்து வைத்த மாவை அதில் ஊற்றி மிதமான சூட்டில் நன்கு கலந்து விட வேண்டும். பின் அதனுடன் கரைத்து வைத்த குங்குமப் பூவையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். மாவு நன்கு வெந்து ஓரளவுக்கு கட்டியாக வரும்போது அதில் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வேக விட வேண்டும். ஓரளவுக்கு வெந்தவுடன் அரைத்து வைத்த முந்திரியையும் அதனுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

மாவு நன்கு வெந்து கேசரி பதத்திற்கு வரும் போது அடுப்பை அணைத்துவிட்டு சிறிதளவு பச்சை கற்பூரத்தை நசுக்கி வாசத்திற்காக அதில் தூவி விட வேண்டும். சூடு ஆறியவுடன் பேக்கிங் சீட்டில் வைத்து மடித்து எடுத்தால் சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் திருப்பாகம் ஸ்வீட் ரெடி!

இதையும் படியுங்கள்:
கொங்கு நாட்டு தேங்காய் பால் ரசம் செய்யலாம் வாங்க! 
Thirupagam recipe - Muttaikose vadai

பள்ளி குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தரக்கூடிய  சத்து நிறைந்த முட்டைக்கோஸ் வடை ரெசிபி!

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் - 200 கிராம் 

 முட்டைகோஸ் - 200 கிராம் 

 பச்சை மிளகாய் -2

 இஞ்சி- ஒரு துண்டு

 கருவேப்பிலை - சிறிதளவு

 கொத்தமல்லி- ஒரு கைப்பிடி அளவு 

 தனி மிளகாய் தூள் - அரை ஸ்பூன் 

 கடலை மாவு - ஒரு கப்

 அரிசி மாவு- அரை கப் 

 பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை

 உப்பு- தேவையான அளவு

 எண்ணெய் -  தேவையான அளவு 

இதையும் படியுங்கள்:
சுவையான காரைக்கால் கட்டுச்சோறு வித் சம்மந்தி சட்னி ரெசிபிஸ்!
Thirupagam recipe - Muttaikose vadai

செய்முறை:

பெரிய வெங்காயம் மற்றும் முட்டை கோஸை நன்கு கழுவி நீள வாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை போட்டு சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள்  மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு கப் கடலை மாவு மற்றும் அரை கப் அரிசி மாவினை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வடை  மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், சிறிய சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முட்டைகோஸ் வடை ரெடி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com