Ragi Banana appam and Paal Pathiri Recipes
Ragi Banana appam and Paal Pathiri RecipesImage Credits: YouTube

ஆரோக்கியமான ராகி வாழைப்பழ அப்பமும், பால் பத்திரியும் செய்யலாம் வாங்க!

Published on

ன்றைக்கு சுவையான மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் வகையான ராகி வாழைப்பழ அப்பமும், பால் பத்திரியும் வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ராகி வாழைப்பழ அப்பம் செய்ய தேவையான பொருட்கள்;

வாழைப்பழம்-2

நாட்டு சர்க்கரை-1 கப்.

தேங்காய் துருவல்-1 கப்.

ராகி மாவு-1 கப்.

நெய்- தேவையான அளவு.

ராகி வாழைப்பழ அப்பம் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் வாழைப்பழம் 2 எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். இப்போது இத்துடன் 1 கப் ராகி மாவு, 1 கப் தேங்காய் துருவல், 1 கப் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு  தண்ணீர் தேவையான அளவு சேர்த்து அப்பம் மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அப்பம் ஊற்றும் பாத்திரத்தில் நெய் விட்டு அதில் செய்து வைத்திருக்கும் மாவை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக வெந்ததும் இன்னொரு பக்கம் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான  ராகி வாழைப்பழ அப்பம் தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

பால் பத்திரி செய்ய தேவையான பொருட்கள்;

பச்சரிசி-2 கப்.

ரவை-1/2கப்.

சர்க்கரை-1 தேக்கரண்டி.

உப்பு-தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
மணக்கும் கிள்ளி போட்ட சாம்பார் மற்றும் பூண்டு பருப்புப் பொடி செய்யலாமா?
Ragi Banana appam and Paal Pathiri Recipes

பால் பத்திரி செய்முறை விளக்கம்;

முதலில் 2 கப் பச்சரிசியை ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு அதை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிய பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு நன்றாக ஊறிய அரிசியை மிக்ஸிக்கு மாற்றி அதில் தேவையான அளவு தண்ணீர் வீட்டு தோசைமாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து ½ கப் ரவை, 1 தேக்கரண்டி சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக் கொண்டேயிருக்கவும்.

சிறிது நேரத்தில் சப்பாத்தி மாவிற்கு நன்றாக திரண்டு வரும். அப்போது இதை மூடிப்போட்டு நன்றாக ஆறவிட்டு விடவும். பிறகு கையில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு சப்பாத்தி போல பிசைந்து மாவை மிருதுவாக்கிக் கொண்டு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

இப்போது இந்த மாவை ஒரு சப்பாத்தி பலகையில் எண்ணெய் தேய்த்து நன்றாக மாவை திரட்டி எடுத்துக்கொள்ளவும். இப்போது அடுப்பில் எண்ணெய் ஊற்றி அதில் திரட்டிய சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்தால் சுவையான பால் பத்திரி தயார். நீங்களும் இந்த டேஸ்டியான ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

logo
Kalki Online
kalkionline.com