ஊறுகாய் சீசன் இது. விதவிதமாய் போடுவோமா ஊறுகாய்கள்!

different kinds of pickles!
healthy pickles
Published on

ந்த சமயத்தில்தான் நிறைய ஊறுகாய்க்கு தேவையான காய்கள் கிடைக்கும்.

மாவடு:

மாவடு ஒரு கிலோ 

உப்பு 8 :1

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

கார பொடி 5:1

விளக்கெண்ணெய் 1 ஸ்பூன்

மாவடு வாங்கி தண்ணீரில் நன்கு அலம்பி ஒரு துண்டில் ஈரம் போக உலர்த்தவும். பிறகு அதனை ஒரு பீங்கான் அல்லது கண்ணாடி ஜாடியில் போட்டு 8 பங்கிற்கு ஒரு பங்கு (8 கப்பிற்கு 1கப்) என்ற அளவில் உப்பு, காரப்பொடி சேர்த்து ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளும், விளக்கெண்ணையும் விட்டு கைப்படாமல் நன்கு கலந்து விடவும். தினமும் மறக்காமல் இதனை குலுக்கி விட நான்கைந்து நாட்களில் சூப்பராக ஊறிய மாவடு தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள தயாராகிவிடும்.

மாங்காய் தொக்கு:

கிளிமூக்கு மாங்காய் 1

உப்பு தேவையானது

மிளகாய் தூள் 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் வெந்தயப்பொடி 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் 1 ஸ்பூன் 

வெல்லம் சிறு துண்டு

தாளிக்க: கடுகு, பூண்டு 2 பல், நல்லெண்ணெய் 4 ஸ்பூன்

மாங்காயை நீரில் கழுவி துடைத்து துருவிக்கொள்ளவும். நல்லெண்ணெய் விட்டு கடுகு, தட்டிய பூண்டு சேர்த்து கடுகு பொரிந்ததும் துருவிய மாங்காய், மஞ்சள் தூள், வெந்தயப் பொடி, பெருங்காயத்தை சேர்த்து தேவையான உப்பு போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள்,  சிறு துண்டு வெல்லம் சேர்த்து சுருளக்கிளறி இறக்கவும். மிகவும் ருசியான மாங்காய் தொக்கு தயார். இதனை சப்பாத்தி, பூரி, அடை, இட்லி, தோசை, தயிர் சாதம் என எல்லாவற்றையும் தொட்டுக்கொள்ள தோதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அலாதியான சுவையில் சமைத்து அசத்தலாம் வாங்க..!
different kinds of pickles!

நெல்லிக்காய் ஊறுகாய்:

நெல்லிக்காய் ஒரு கிலோ 

உப்பு  8:1

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

வெந்தய பொடி 1 ஸ்பூன்

கார பொடி 4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 ஸ்பூன்

நல்லெண்ணெய் 2 ஸ்பூன் 

கடுகு 1 ஸ்பூன்

மார்க்கெட்டில் நிறைய நெல்லிக்காய்கள் கிடைக்கிறது. நெல்லிக்காய்களை வாங்கியதும் சுத்தம் செய்து அதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். நன்கு வெந்ததும் கையால் நசுக்கி உள்ளிருக்கும் கொட்டைகளை எடுத்துவிட்டு மிக்ஸியில் ஒன்றிரண்டாக (விழுதாக இல்லாமல்) அரைத்தெடுக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் நெல்லிக்காயை சேர்த்து தேவையான உப்பு போட்டு வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், காரப்பொடி ஆகியவற்றை சேர்த்து அரைத்த நெல்லிக்காயை போட்டு தேவையான உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும். நெல்லிக்காயில் உப்பு காரம் இறங்கி மிகவும் ருசியாக இருக்கும் இதனை தயிர்சாதத்துடன் சாப்பிட அமிர்தம்தான் போங்கள்.

பச்சை குருமிளகு ஊறுகாய்:

பச்சை மிளகு 1/4 கிலோ

உப்பு தேவையான அளவு

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

எலுமிச்சை பழம் 4

நல்லெண்ணெய் 1 ஸ்பூன் 

பச்சை மிளகு கொத்து கொத்தாக இருக்கும். அதனைப் பிரித்து எடுத்து நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும். ஒரு  கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் மிளகை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு எலுமிச்சம் பழ சாறு கலந்து நன்கு ஊறவிடவும்.

விருப்பப்பட்டால் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து தினமும் மறக்காமல் ஒரு முறை குலுக்கி விட்டு நான்கு நாட்கள் ஆனதும் பச்சை நிறம் மாறி மஞ்சள் நிறத்திற்கு வந்திருக்கும். பச்சை குறு மிளகு ஊறுகாய் தயார். இதனை பிரிட்ஜில் வைத்து நீண்ட நாட்கள் உபயோகிக்கலாம். உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தும். ருசியும் சூப்பராக இருக்கும். தயிர் சாதத்திற்கு ஏற்ற ஊறுகாய் இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com