நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? மக்கானா மில்க் ட்ரை பண்ணுங்க!

Makana Milk
Makhana
Published on

க்கானாவை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நிறைய நன்மைகளை வாரி வழங்கும். தாமரை விதைகளை (Makhana) வறுத்து, பாலுடன் ஊறவைத்து, பொரியல்களில் சேர்த்து, சிற்றுண்டியாகவோ, இனிப்பு வகைகளிலோ சாப்பிடலாம். வெறும் வயிற்றில் 4-5 விதைகளை சாப்பிடுவதும், பாலில் ஊறவைத்து சாப்பிடுவதும் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். சிறிது நெய்யில் வறுத்து உப்பு, மிளகுத்தூள் அல்லது மசாலாத்தூள் சேர்த்து சாப்பிடலாம். கீர் (kheer) போன்ற இனிப்பு வகைகளிலும், பழச்சாறுகள் அல்லது ஸ்மூத்திகளில் கலந்து பருகலாம்.

மக்கானாவின் நன்மைகள் தெரிஞ்சா போதுமா? அதை வாங்க வேண்டாமா? உடனே வாங்க...

மக்கானா பால் சாப்பிடும் முறை:

ஒரு வாணலியில் நெய் சிறிது விட்டு தாமரை விதைகளை மொறுமொறுப்பாக வறுத்துக்கொள்ளவும். பாலை நன்கு சூடாக்கி அதில் வறுத்த விதைகளை சேர்த்து அவை மென்மையாக மாறும் வரை 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா போன்ற டிரை ஃப்ரூட்ஸ்களை பொடியாக நறுக்கி சேர்த்து இறக்கவும். சிறிது ஆறியதும் தேன் கலந்து பருகலாம். இவை தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு ஆற்றலைத்தரும்.

இரவில் தாமரை விதைகளை ஏழு எட்டு எடுத்து பாலில் ஊற வைத்து விடவும். காலையில் வெறும் வயிற்றில் அதை அப்படியே பருகலாம். இது தசை வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

மக்கானா மற்றும் பால் இரண்டும் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்:

செரிமான ஆரோக்கியம்:

மக்கானாவில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அத்துடன் மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்:

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் மக்கானா குறைந்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் கொண்டது. இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதையும் படியுங்கள்:
சுவை கூட்டும் சமையல் வித்தைகள்… இதோ சில சமையல் குறிப்புகள்!
Makana Milk

எடை மேலாண்மை:

குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக மக்கானா பசியை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து எடை இழப்பிற்கு உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியம்:

மக்கானாவில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

மக்கானாவில் உள்ள பாலிசாக்கரைடுகள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றது.

அமைதியான தூக்கத்திற்கு:

மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் (tryptophan) இருப்பதால் இது மனதை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள்:

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் செல்களை பாதுகாத்து, நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கின்றது. மக்கானாவில் உள்ள நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.

மக்கானாவின் நன்மைகள் தெரிஞ்சா போதுமா? அதை வாங்க வேண்டாமா? உடனே வாங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com