நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க… ஒரே பொருள் மூன்று வெரைட்டி ரெசிபிஸ்!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க… ஒரே பொருள் மூன்று வெரைட்டி ரெசிபிஸ்!

கொள்ளுப் பொடி

தேவை -

கொள்ளு வறுத்தது -- 1 டம்ளர்

மிளகு, சீரகம் - 3 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 8

உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்

தனியா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விடாமல் அனைத்தையும் வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். ஆறியதும் பாட்டியில் போட்டு வைக்கவும்.

சூடான சாதத்தில் எண்ணெய் விட்டு கொள்ளுப்பொடி 2 ஸ்பூன் சேர்த்து பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:
டாட்டூ போடுவதால் ஏற்படும் விளைவுகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க… ஒரே பொருள் மூன்று வெரைட்டி ரெசிபிஸ்!

கொள்ளு சட்னி

தேவை:

வறுத்த கொள்ளு - 1/2 டம்ளர்

புளி - நெல்லி அளவு.

காய்ந்த மிளகாய் - 5

பூண்டு - 3 பல்

தேங்காய் துருவல் - 1/2 கப்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

அனைத்தையும் ஒன்றாகப் போட்டு நீர் ஊற்றிமிக்ஸியில் நைசாக அரைக்கவும். சூடான சாதத்தில் எண்ணெய் ஊற்றி சட் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். உடல் பலமாகும்.

கொள்ளு ரசம்

தேவை:

கொள்ளு வறுத்தது - 1 டம்ளர்

காய்ந்த மிளகாய் - 5

பூண்டு - 8 பல்

மிளகு, சீரகம் - 2 டீ ஸ்பூன்

புளி - சிறிது

கடுகு - 1 டீஸ்பூன்

தக்காளி - 1

ம.தூள் - சிறிது

உப்பு  -தேவைக்கு

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

ஒரு குக்கரை அடுப்பில்

வைத்து வறுத்த கொள்ளை 2

டம்ளர் நீர் ஊற்றி குழைய வேக விடவும்.

பின் அதில் புளி, உப்பு, நறுக்கிய தக்காளி, நசுக்கிய பூண்டு மிளகாய் சேர்த்து கரைத்து ஒரு கொதி வந்ததும் அதனுடன் மிளகு, சீரகம் பொடித்து போடவும். கொள்ளு வேக வைத்த நீரை வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கொதி வந்த கொள்ளுரசத்தில் போடவும். அதில் வடிகட்டிய நீரையும் சேர்த்து நன்கு கலந்த கொத்தமல்லி இலையை போடவும், சாதத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். சளி, இருமல், தலைபாரம் சரியாகும்.

-வசந்தா மாரிமுத்து

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com