tattoo
tattoo

டாட்டூ போடுவதால் ஏற்படும் விளைவுகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

Published on

ச்சைக் குத்திக்கொள்வதை அந்தக் காலத்தில் வழக்கமாகவும், பழக்கமாகவும் வைத்திருந்தனர். உலக நாடுகளில் அவரவர் கலாசாரத்திற்கேற்ப உருவங்களை, பெயர்களை, மிருகங்களை பச்சைக் குத்திக் கொண்டனர். இப்போதோ. பச்சைக் குத்திக் கொள்வதை. ‘டாட்டூ’ என நாகரிகப் பெயரிட்டு ஆண், பெண் என இருபாலரும் விதவிதமான வண்ணங்களில் , டிசைன்களில் உடல் முழுவதும் குத்திக் கொண்டு வெரைட்டி காட்டுகின்றனர். இது தற்போது பேஷனாகவும், பணம் கொழிக்கும் தொழிலாகவும் மாறிவிட்டது.

அப்போதெல்லாம் அகத்திக்கீரை மற்றும் மஞ்சள் பொடியை சேர்த்து துணியில் கட்டி, எரித்து கரியாக்கி அதில் தண்ணீர் கலக்க அடர்ந்த பச்சை நிறம் கிடைக்கும். அதை கூர்மையான ஊசியால் தொட்டு உடலில் பச்சை குத்திக் கொண்டனர். அந்த இடத்தை சுடுநீரில் கழுவ டிசைன் பளிச்சென்று தெரியும்.

இப்போது இதுபோன்ற டிசைன்கள் வரைய சீன மை பயன்படுத்தப்படுகிறது. வேண்டிய நிறங்களைப் பெற, அந்த மையில் குரோமிக் ஆக்ஸைடு, மெர்க்குரி, காட்மியம், இரும்பு ஆக்சைடு, ஆன்டிமணி, பெரிலியம், குரோமியம் போன்ற ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இது பலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

இதையும் படியுங்கள்:
இரவில் உறங்கவிடாத சிரங்கு பிரச்னை!
tattoo

டாட்டூ எனப்படும் பச்சை குத்துவதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் சருமத்தில் ஊடுருவி, இரத்தத்தில் கலந்து உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை மாற்றும் ஆற்றல் கொண்டது. டாட்டூ போட பயன்படுத்தப்படும் கருப்பு மை குறைந்த பாதிப்பைக் கொண்டது. சிவப்பு உள்ளிட்ட இதர நிறங்களைத் தவிர்க்கலாம். நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இவற்றைத் தவிர்த்தலே நல்லது. அப்படி ஆசைப்பட்டால் டாட்டூ போடுபவர் அனுபவம் வாய்ந்தவரா, படித்திருக்கிறாரா, அங்கு போடப்படும் ஊசியில் எந்த வகை மை நிரப்பப்படுகிறது போன்றவற்றை கேட்டு தெளிவு பெற வேண்டும். இதை அழகு நிலையங்களில் போடுவது ஆபத்தானது. உயிருக்கே தீங்கு விளைவிக்கக் கூடியது.

தற்காலிகமாகப் போட்டாலும் சில நிறங்களை லேசரால் கூட அழிக்க முடியாது. டாட்டூ போட சதையாக உள்ள கைகள், மேல் கை, காலின் பின் பகுதி, முதுகு போன்ற இடத்தில் போடலாம். மணிக்கட்டு, முழங்கை போன்ற இடத்தில் போட்டால் அங்கு புண் ஏற்பட்டால் ஆற நாளாகும். MRI போன்ற பரிசோதனைகளின்போது, ‘டாட்டூ போட்டு இருக்கிறாரா?’ எனக் கேட்கிறார்கள். அதனால் பாதிப்பு என்கின்றனர். அதனால் தொற்றுக்கள், பிரச்னைகளை தரும் டாட்டூக்களை போடாமல் இருப்பதே பாதுகாப்பானது.

logo
Kalki Online
kalkionline.com