

Toasted Custard Bread Pudding: சட்டென்று வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு புட்டிங் செய்து கொடுக்க வேண்டும் என்ற விருப்பினால், நாம் செய்யப் போகிற டெஸர்ட் ஈசியாகவும் அதன் செய்முறை எளிமையாகவும் இருந்தால்தான் நமக்கு செய்வதற்கே பிடிக்கும். அதுபோல் செய்வதற்கு எளிமையான டோஸ்டடு கஸ்டர்ட் பிரட் புட்டிங் செய்முறையை இப்பதிவில் காண்போம்.
செய்ய தேவையான பொருட்கள்:
பிரட் ஸ்லைஸ் - 4
பால் -அரை லிட்டர்
சுகர் -கால் கப்
கஸ்டர்டு பவுடர் - 1டேபிள் ஸ்பூன்
விருப்பப்பட்ட நட்ஸ்ஃப்ளேக்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பிரட்டின் ஓரங்களை கட் செய்து எடுத்துவிட்டு அதன் மென்மையான பகுதியை சிறிய சதுரங்களாக 12 துண்டுகள் வரும்படி ஒரே அளவாக கத்தியால் வெட்டி வைக்கவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் வெண்ணையை போட்டு பிரட் துண்டுகளை பொன்னிறமாக போஸ்ட் செய்து ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும்.
ஓரளவுக்கு பாலைக்காய்ச்சி அதில் சுகரை கலந்து வைக்கவும். ஒரு கிண்ணத்தில் கஸ்டட் பவுடரை போட்டு அதில் சிறிதளவு பாலை ஊற்றி நன்றாக கட்டி படாமல் கலந்து கலந்த கஸ்டர்டை பாலில் சேர்த்து கொஞ்சம் திக்காக வரும் வரை கஸ்டர்ட் சேர்த்த பாலை கொதிக்க விடவும்.
அந்த கஸ்டர்டு கெட்டியாகி தயாரானதும் அதை டோஸ்ட் செய்த பிரட்டின் மீது ஊற்றி நட்ஸ் ஃப்ளேக்ஸை தூவி பரிமாறாகவும்.
பிரட்டை டோஸ்ட் செய்யும் பொழுது கருக விடாமலும் ,கஸ்டடை பாலில் கலந்து காய்ச்சும் பொழுது கட்டி படாமலும் செய்வதுதான் இதில் மிகவும் கவனமாக செய்ய வேண்டிய குறிப்புகள்.
பிரட் புட்டிங் செய்யும்பொழுது விதவிதமாக செய்து பரிமாறலாம். பிரட்டு ,பால், சீனி எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடித்து ஜாதிக்காய் பவுடர் அல்லது கடற்பாசி சேர்த்து கொதிக்க வைத்து அதில் கொக்கோ பவுடர் சேர்த்து கிளறி கூலாக்கி அதில் விருப்பப்பட்ட பழங்கள் சேர்ந்து பரிமாறலாம்.
வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி அதில் மஞ்சள் பொடி தனி மிளகாய் பொடி ,பொடியாக நறுக்கிய தனியா, கொஞ்சம் தக்காளி சாஸ் சேர்த்து கிளறி பொடியாக நறுக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து மசாலா பிரட்டாக செய்து பரிமாறலாம்.
ஒரு பாத்திரத்தில் பால் ,சீனி, வெண்ணெய், முட்டை இவைகளை நன்றாக அடித்து அதில் பிரட்டை நனைத்து தோசை கல்லில் சிறிது நெய் விட்டு டோஸ்ட் செய்யலாம்.
பிரட்டின் நடுவில் காய்கறிகளை வதக்கி வைத்து அதை இன்னொரு பிரட்டால் மூடி போஸ்ட் மேக்கரில் வைத்து டோஸ்ட் செய்து பரிமாறலாம்.
இப்படி பிரட்டில் புட்டிங்கில் இருந்து பகவகையான ரெசிபிகள் செய்து வீட்டில் எல்லோருக்கும் கொடுத்து அவர்கள் சுவைப்பதைக் கண்டு ரசிக்கலாம்.