பிரியாணி டேஸ்டில் தக்காளி இடியாப்பம்!

தக்காளி இடியாப்பம்
தக்காளி இடியாப்பம்

டியாப்பம் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்றாகும். சிலர் வீட்டிலேயே சிரமம் பார்க்காமல் அரிசியை அரைத்தோ, ஆட்டியோ இடியாப்பம் செய்வதுண்டு. ஆனால் தற்சமயம் நேரமின்மை காரணமாக சந்தைகளில் கிடைக்கும் ரெடிமேட்  இடியாப்பம் வாங்கி பயன்படுத்துகின்றனர். கூடுமானவரை வீடுகளில் சுகாதாரமாக செய்யும் இடியாப்பம் போன்றவைகளே குழந்தைகளுக்கு நல்லது. இந்த இடியாப்பத்தில் மணக்கும் தக்காளி பிரியாணி டேஸ்டில் ருசிக்க வைக்கும் தக்காளி இடியாப்பம் செய்யலாம். எப்படி தெரியுமா? இதோ

தேவையான பொருட்கள்:
வேகவைத்த இடியாப்பம் - இரண்டு கப் தக்காளி - ஆறு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய்-  இரண்டு
இஞ்சி - சிறு துண்டு நறுக்கியது
பூண்டு - ஆறு பற்கள் நறுக்கியது
பட்டை -ஒரு துண்டு
கிராம்பு -மூன்று
சோம்பு - சிறிது
மஞ்சள்தூள்- அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
கருவேப்பிலை கொத்தமல்லி -தேவைக்கு புதினா-  சிறிது
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு - தாளிக்க.

செய்முறை:

றிய இடியாப்பத்தை நன்கு கொத்தி விட்டுக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு. கறிவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய  இஞ்சி, பூண்டு சேர்த்து அதனுடன் சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றையும் சேர்த்து வாசம் வரும். வந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை - பறித்த மலர்கள்!
தக்காளி இடியாப்பம்

தக்காளி நன்கு வதங்கியதும் தேவையான  உப்பு,  மஞ்சள்தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி அதில் பொடித்து வைத்த  இடியாப்பத்தை சேர்த்து நன்கு கிளறவும். நன்கு கிளறி சூடானதும்  எடுத்து மேலே பொதினா, கொத்தமல்லி தழை தூவி சிறிது நேரம் மூடிவைத்துப் பின் பரிமாறவும்.
குறிப்பு- தக்காளியின் புளிப்பு மட்டுப்பட சிறிது சர்க்கரை சேர்ப்பது அவரவர் விருப்பம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com