பெங்காலின்பாரம்பரிய இனிப்புகள் சொல்லும் தனித்துவமான சுவை பயணம்!

தெரு கடைகளில் இருந்து பாரம்பரிய இனிப்பு நிலையங்கள் வரை, பெங்காலின் தனித்துவமான இனிப்புகள் ஒவ்வொரு பயணத்தையும் அந்த நிலத்தின் உணவு கலாச்சாரத்தை அறியச் செய்யும் சுவை அனுபவம்
bengali-sweets
bengali-sweets
Updated on

வ்வொரு மாநிலத்திலும் பாரம்பரிய சுவைகளை சொல்லும் இனிப்புகள் நிச்சயம் நினைவிற்கு வருவதுபோல பெங்கால் என்றாலே என்று நம் நினைவுக்கு வருவது ரசகுல்லாதான்.

ஆனால் பெங்காலில் இனிப்புகள் ரசகொல்லா மட்டும் அல்ல. அங்குள்ள உணவு கலாச்சாரம் பல்வேறு சுவைகள், அமைப்புகள் மற்றும் பாரம்பரியங்களை கொண்டது. அந்த மாநிலத்தின் உண்மையான சுவையை வெளிப்படுத்தும் 8 இனிப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஜோய்நகர்-எர் மோ ஆ

இது குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும் ஒரு சிறப்பு இனிப்பு. நொலன் குர் (பனை வெல்லம்) மற்றும் அரிசி கொண்டு செய்யப்படுகிறது. இது மிகவும் மென்மை யாகவும், வாயில் உருகும் தன்மையுடனும் இருக்கும். குறுகிய காலம் மட்டுமே கிடைப்பதால், இதற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

ஷோர் பாஜா

பாலின் மேல் உருவாகும் கிரீம் அடுக்குகளை சேகரித்து தயாரிக்கும் இனிப்பு இது. எண்ணெயில் பொரித்த பிறகு சக்கரை பாகில் நனைக்கப்படுகிறது. வெளியில் குருமையாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும்.

ஜோல்போரா சந்தேஷ்

இது ஒரு வித்தியாசமான இனிப்பு. வெளியில் சாதாரண சந்தேஷ் போல இருந்தாலும், உள்ளே இனிப்பு சாறு நிரம்பியிருக்கும். முதல் கடியில் அந்த சாறு வெளிவந்து தனி அனுபவத்தை தருகிறது.

லாங்க்சா

இது குலாப் ஜாமுனை போன்ற தோற்றம் கொண்டது. ஆனால் சுவையில் மாறுபாடு உள்ளது. நீளமான வடிவில் இருக்கும் இது எண்ணெயில் பொரித்து பாகில் ஊறவைக்கப்படுகிறது. சற்று கெட்டியான வெளிப்புறமும், மென்மையான உள்ளுறையும் இதன் சிறப்பு.

மிஹிதானா

சிறிய தானியங்களாக இருக்கும் இந்த இனிப்பு மிகவும் மென்மையானது. வாயில் போடும்போது உடனே கரையும் தன்மை கொண்டது. இது எளிய சுவையுடன் இருக்கும்.

சீதாபோக்

அரிசிபோல தோன்றும் இந்த இனிப்பு உண்மையில் இனிப்பு உணவாகும். அரிசி மாவு மற்றும் பால் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இதன் வடிவம் மற்றும் சுவை தனித்துவமானது.

லோபோங்கோ லோடிகா

மாவில் இனிப்பு பூரணத்தை வைத்து மடித்து, லவங்கம் கொண்டு கட்டி தயாரிக்கப்படும் இனிப்பு இது. எண்ணெயில் பொரித்து பாகில் ஊறவைக்கப்படுகிறது. இனிப்பு மற்றும் நறுமணம் சேர்ந்து இருக்கும்.

இதையும் படியுங்கள்:
நவரத்தின மோதிரத்தை யார் யார் அணியலாம்? அதன் பலன்கள் தெரியுமா?
bengali-sweets

கீரர் சிங்காரா

சமோசாபோல தோன்றும் இந்த இனிப்பு, உள்ளே கொய்யா, பருப்பு, திராட்சை போன்ற பூரணத்துடன் இருக்கும். வெளியில் குருமையாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும்.

பெங்காலின் இந்த இனிப்புகள் அனைத்தும் அதன் பாரம்பரியம் மற்றும் சுவை மரபை வெளிப்படுத்து கின்றன. ரசகொல்லாவைத்தாண்டி இந்த இனிப்புகளை சுவைத்தால், புதிய அனுபவத்தை நம்மால் பெறமுடியும்.

பயணம் செய்வது என்றால் வெறும் இடங்களைப் பார்ப்பதற்காக மட்டுமல்ல; அங்குள்ள உணவுகளின் மூலம் அந்த நிலத்தின் உண்மையான ஆன்மாவை அறிதலும் ஆகும். ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் கிடைக்கும் இனிப்புகளை சுவைப்பது அந்த இடத்தின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை நம்முடன் இணைக்கிறது.

தெரு கடைகள் முதல் பாரம்பரிய இனிப்பு கடைகள் வரை எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சுவைத்து பாருங்கள்; அப்போதுதான் அந்த பயணம் நினைவில் நீங்காத இனிமையான அனுபவமாக மாறும்.

logo
Kalki Online
kalkionline.com