பாரம்பரிய கருப்பு கட்டி பணியாரம் மற்றும் உன்னி அப்பம் செய்முறை உங்களுக்காக..!

கருப்பு கட்டி பணியாரம்
கருப்பு கட்டி பணியாரம்Image credit - youtube.com
Published on

கருப்பு கட்டி பணியாரம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி _2 கப், கருப்புக்கட்டி பொடித்தது _2 கப், பழுத்த வாழைப்பழம் _ 1,எண்ணெய் _1/2 லிட்டர்

செய்முறை;

முதலில் அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து சல்லடை யில் போட்டு தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு மிக்ஸியில் திரித்து புட்டு மாவு அரிப்பில் போட்டு அரித்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் பழத்தை உரித்து போட்டு பொடித்த கருப்புக்கட்டியை அத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்து கலக்கவும்.. பின் திரித்து வைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக விரவி எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு குழி கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி மீடியமான தீயில் வேகவிடவும். பின் மறு பக்கம் திருப்பி போட்டு வெந்ததும் புஸ் புஸ் என்று மிருதுவான, சுவையான கருப்புக்கட்டி பணியாரம் தயார். உடலிற்கு சக்தியும் ஆரோக்கியத்தையும் கொடுக் கும் இந்த பணியாரத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கோவில் களிலும் இந்த பணியாரம் செய்வார்கள்.

உன்னி அப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி _2 கப், கோதுமை மாவு 1/4 கப், வெல்லம் _300 கிராம், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் _1/4 கப், எண்ணெய்_1/2 லிட்டர், நன்கு பழுத்த வாழைப்பழம் 1, ஏலக்காய் தூள் 1/2 ஸ்பூன்.

இதையும் படியுங்கள்:
உற்சாகமும் பயனும் தரும் பொழுதுபோக்குகள் எவை தெரியுமா?
கருப்பு கட்டி பணியாரம்

செய்முறை:

முதலில் அரிசியை _3 மணி நேரம் ஊறவைத்து பின் தண்ணீரை வடிகட்டி விட்டு 10 நிமிடம் காற்றில் உலர்த்தி விட்டு மிக்ஸியில் நைசாக திரித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பழத்தை உரித்து போட்டு வெல்லத்தை நன்கு பொடித்து சேர்த்து நன்கு பிசைந்து பின் தேங்காய் துண்டுகளையும், கோதுமை மாவையும் போட்டு நன்கு பிசைந்து அத்துடன் திரித்து வைத்த அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து 10 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீடியமான தீயில் வைத்து கை வைத்தே மாவை சிறிது, சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரிந்ததும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும். மிகவும் சுவையான உன்னி அப்பம் ரெடி. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த உன்னி அப்பத்தை கேட்டு, கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அத்தனை சுவையானது ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com