பாரம்பரிய உணவு வகைகள் கார கச்சாயம் மற்றும் இனிப்பு கச்சாயம்!

காரகச்சாயம்
காரகச்சாயம்www.youtube.com

காரகச்சாயம்:

பச்சரிசி ஒரு கப் 

துவரம்பருப்பு அரை கப் 

உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன் 

ஜவ்வரிசி 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் 6

மிளகு 1/2 ஸ்பூன் 

சீரகம் 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1 ஸ்பூன்

உப்பு 

கறிவேப்பிலை சிறிது

கொத்தமல்லி சிறிது

பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்

எண்ணெய் பொரிக்க

ரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மூன்றையும் தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசியை   தனியாக ஊறவைக்கவும். பச்சரிசி பருப்பு வகைகளை தேவையான அளவு உப்பு, மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அரைத்த மாவுடன் மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள், ஊற வைத்த ஜவ்வரிசி இரண்டையும் சேர்த்து பொடியா நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கலந்து விடவும். வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடானதும் மாவை கரண்டியால் எடுத்து விடவும். சிவந்ததும் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் பொன் கலரில் வந்ததும் எடுத்துவிட மிகவும் ருசியான காரகசாயம் தயார். விருப்பப்பட்டால் பொடியா நறுக்கிய வெங்காயம், தேங்காய் பற்கள் சேர்த்து கலந்து விட்டு எண்ணெயில் பொரிக்கலாம். ருசி கூடும்.

இனிப்பு கசாயம்:

இனிப்பு கசாயம்
இனிப்பு கசாயம்www.youtube.com

பச்சரிசி 1 கப்

துவரம்பருப்பு அரை கப் 

உளுத்தம் பருப்பு 2ஸ்பூன் 

ஜவ்வரிசி 2 ஸ்பூன்

வெல்லம் ஒரு கப் 

ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன் 

உப்பு ஒரு சிமிட்டு

எண்ணெய் பொரிக்க

இதையும் படியுங்கள்:
குழந்தைகளை சுலபமாக நாம் வழிக்குக் கொண்டுவருவது எப்படி தெரியுமா?
காரகச்சாயம்

ரிசி பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற விடவும். ஜவ்வரிசியை தனியாக ஊற வைக்கவும். வெல்லத்தை பொடி பண்ணி வைக்கவும். மிக்ஸியில் ஊறிய அரிசியை சேர்த்து வெல்லம், ஏலக்காய் தூள் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அத்துடன் ஊறிய ஜவ்வரிசி, உப்பு ஒரு சிமிட்டு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் சூடானதும் கரண்டியால் எடுத்துவிட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுத்துவிட மிகவும் ருசியான இனிப்பு கசாயம் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com