

கோவை ஸ்பெஷல் கொங்கு தக்காளி குழம்பு
தேவையான பொருட்கள்:
பெரிய தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி
பூண்டு – 10 பல்
கருவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பட்டை – 2 துண்டு
கசகசா – ¼ டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 5
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் 1 கப்
பொட்டுகடலை பருப்பு 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தக்காளிகளை முழுதாக போட்டு மூடிவைத்து வதக்கவேண்டும். தக்காளி நன்கு வதங்கிய பிறகு எடுத்து வைக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பட்டை, சோம்பு, கசகசா, சீரகம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு நன்கு வறுத்து எடுத்துவைக்கவும்.
அதே வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் பொட்டுக்கடலைப்பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, வதக்கிய தக்காளியுடன் சேர்த்து நன்கு மைய அரைத்து எடுக்கவும்.
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். அதில் சிறிது சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, பின்னர் அரைத்த தக்காளி குழம்பை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
இந்த கோவை ஸ்பெஷல் கொங்கு தக்காளி குழம்பு சூடான இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் பரிமாறினால் சாப்பிட மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
வாழைக்காய் பெப்பர் ஃப்ரை
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வாழைக்காய் – 1 கப்
தனியா – 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
இஞ்சி–பூண்டு விழுது – 1 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
நெய் – ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, சீரகம், மிளகு ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வானலியில் நன்றாக வறுத்து எடுத்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வாழைக்காயை போட்டு நன்றாக வதக்கி மூடி வைக்கவும். பின்னர் இஞ்சி–பூண்டு விழுது சேர்த்து, பொடித்து வைத்துள்ள மசாலாபொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக பிரட்டி வறுக்கவும்.
இறுதியில் பெருங்காயத்தூள் தூவி, நெய் சேர்த்து கலக்கி இறக்கவும்.