ஆரோக்கியம் தரும் வரகரிசி வெண்பொங்கல்: பாரம்பரிய சிறுதானிய உணவு!

வரகரிசி வெண்பொங்கலில் உள்ள சத்துக்கள் மாதவிடாய் கோளாறுகள், மூட்டு வலி, கண் மற்றும் நரம்பு பிரச்னைகளை குறைத்து, தூக்கத்தை மேம்படுத்தும்; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவைமிகு உணவு.
traditional-millet-pongal
traditional-millet-pongal
ஆ.நர்மதா

வணக்கம்! என்னுடைய பெயர் ஆ.நர்மதா. நான் ஒரு முதுநிலை வேதியியல் பட்டதாரி. விருதுநகர் அருகில் இருக்கும் பாளையம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தமிழின் மீது இருந்த ஆர்வத்தினால் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுத கற்றுக் கொண்டேன்.இந்த சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் வீரியத்துடன் இருக்கும். இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னுடைய எழுத்தாற்றலை படைத்து வருகிறேன்.

Updated on

வெண்பொங்கல் கோவில் பிரசாதங்களிலும், வீட்டு விசேஷங்களிலும் இருக்கும் ஒரு பாரம்பரிய உணவாகும். வெண்பொங்கல் ஒரு சிறந்த காலை உணவாக உள்ளது. நம் வீடுகளில் அன்றாட பச்சரிசியை கொண்டே வெண்பொங்கல் செய்து சமைத்து வந்துள்ளோம்.

அதற்கு மாற்றாக   வரகு அரிசியை கொண்டு வெண்பொங்கல் செய்வது மிகவும் சுவையுடையதாக இருக்கும். வரகு அரிசி ஒரு சிறந்த பாரம்பரிய சிறுதானிய உணவாக உள்ளது. வரகரிசி விரைவில் வேகக்கூடியதும். இதில் அதிக அளவு  புரதம் மற்றும் இரும்பு சத்து உள்ளது. அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் குறைவாக உட்கொண்டாலே வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்னையைத் தடுக்க உதவுகிறது. வரவு அரிசி பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்து மூட்டு வலியில் இருந்து  நிவாரணம் அழிக்கிறது. வரகு அரிசி கண் மற்றும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு சிறந்த உணவாக உள்ளது. மேலும் வெண்பொங்கல் சாப்பிடுவது தூக்கத்தை மேம்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்: 

வரகரிசி            - 250கிலோ 

பாசிப்பருப்பு    - 100 கிராம் 

மிளகு               -  10கிராம்

சிறுஞ்சீரகம்         -  5 கிராம் 

இஞ்சி               - தேவையான அளவு

கறிவேப்பிலை - தேவையான அளவு 

உப்பு                 - தேவையான அளவு 

நெய்                 - தேவையான அளவு 

முந்திரி             -  தேவையான அளவு 

மல்லித்தழை    - தேவையான அளவு

செய்முறை: 

வரகு அரிசி பாசிப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறியவுடன் ஒரு குக்கரில் தேவையான அளவு நீர் ஊற்றி குலைந்து வரும் வரை வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
வயிற்றுப்போக்கா? எளிய பாட்டி வைத்தியம் வீட்டிலேயே இருக்க... why worry?
traditional-millet-pongal

குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் ஒரு கரண்டியைக் கொண்டு பொங்கலை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். ஒரு வாணலியில் தேவையான அளவு நெய் ஊற்றி மிளகு, சிறுஞ்சீரகம், இஞ்சி, முந்திரி, கருவேப்பிலை சேர்த்து நன்கு சிவந்து வரும் வரை பொரித்தெடுக்க வேண்டும். நெய் பயன்படுத்துவதன் மூலம் அது வெண்பொங்கலுக்கு ஒரு சிறந்த நறுமணத்தைத் தரக்கூடியது.

மேலும் நெய் முகப்பளபளப்பிற்கு உதவும். வரகு அரிசி பாசிப்பருப்பு கலவையில் தாளிப்பை சேர்த்து தேவையான அளவு நறுக்கிய மல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி கொடுக்கவேண்டும். கமகமக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் பாரம்பரியமான உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய வரகரிசி  வெண்பொங்கல் தயார்.

நாம் அன்றாட பச்சரிசியில் செய்வதை காட்டிலும் வரகு அரிசியில் வெண்பொங்கல் செய்வது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும். கடைகளில் வாங்கி சாப்பிடுவதை காட்டிலும் நாம் வீட்டிலேயே செய்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com