கிறிஸ்துமஸ் - ஸ்பெஷல் கேக் ரெசிபிஸ்!

Traditional plum cake recipe!
Traditional plum cake recipe!

தோ கிறிஸ்துமஸ்... கூப்பிடும் தூரத்தில் வந்துவிட்டது.
கிறிஸ்துமஸ்ன்னாலே கேக்குதான். கேக் செய்ய வேண்டும். ஆனால், 'ஓவன்' இல்லையே என யோசிக்கிறீர்களா? Don't worry. ஒரு வாணலியில் மணலை சூடாக்கி, அதன்மேல் ஒரு தட்டை வைத்து, அந்த சூடான தட்டின்மேல் பிஸ்கட் அல்லது கேக் வைத்தப் பாத்திரத்தை வைத்துமூடினால், அதுவே ஓவன்போல் மாறிவிடும்.

* முட்டையில்லாத கேக்

முட்டையில்லாத கேக்
முட்டையில்லாத கேக்

தேவையானவை:

மைதா மாவு - 200 கிராம்,  வெண்ணெய்- 100 கிராம், பால் - ஒரு கப்,  பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன், சோடா உப்பு - அரை டீஸ்பூன், சர்க்கரை - 75 கிராம்,  ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன், கிராம்புத்தூள் - அரை டீஸ்பூன், உலர்ந்த திராட்சை - 50 கிராம், தேன்- 50 கிராம்.

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சோடா உப்பு, ஏலக்காய் தூள், கிராம்புத் தூள் கலந்து மூன்று முறை நன்கு சளிக்கவும். இந்த மாவுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு உதிர்க்கவும். பாலில் சர்க்கரை, தேன் இவைகளை கரைத்துக்கொள்ளவும். 

இக்கரைசல் மாவில் புரட்டி உலர்ந்த திராட்சை சேர்த்து கேக் கலவையைத் தயாரித்துக்கொள்ளவும். இக்கலவையை  பேக்கிங் ட்ரேயில் வைத்து பேக் செய்யவும். அருமையான கேக் இது.

* பனானா கேக்

பனானா கேக்
பனானா கேக்

தேவையானவை:

மைதா மாவு- 200 கிராம், பேக்கிங் பவுடர் - இரண்டு டீஸ்பூன், சர்க்கரை - 150 கிராம்,  வெண்ணெய் - 100 கிராம் , முட்டை – இரண்டு,  வாழைப்பழம் – இரண்டு,  பால் - 50 மில்லி.

செய்முறை:

மைதா மாவுடன், பேக்கிங் பவுடர் கலந்து மூன்று முறை நன்கு சலிக்கவும். முட்டைகளை நன்கு நுரைக்க அடித்துக்கொள்ளவும். வாழைப்பழத்தைப் பிசைந்து பால் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்கு லேசாகும்வரை விரல்களால் குழைக்கவும். சலித்த மாவில் வெண்ணெய், சர்க்கரை குழைத்த கலவை, நுரைக்கஅடித்த முட்டை, அரைத்த வாழைப்பழ விழுது சேர்த்து விரல்களாலேயே நன்கு மிருதுவாக கலக்கவும். பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய்யை தடவி, மாவு தூவிய கேக்கலலையை ஊற்றி பேக் செய்யவும்.

* மேங்கோ கார்ன்ஃப்ளக்ஸ்

மேங்கோ கார்ன்ஃப்ளக்ஸ்
மேங்கோ கார்ன்ஃப்ளக்ஸ்

தேவையானவை:

மாம்பழம் – 5,  ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்,   சுண்ட காய்ச்சிய பால் - அரைக் கப்,  பால் பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன்,  கார்ன்ஃப்ளேக்ஸ் - கால் கப், பால் - இரண்டரை கப்,  பைனாப்பிள் புட் கலர், இரண்டு  எலுமிச்சை பழச்சாறு – தலா இரண்டு துளிகள்.

செய்முறை:

சாதாரண பாலில் கார்ன்பிளேக்ஸை நன்கு ஊறவிடவும். ஊறிய கார்ன்ப்ளேக்ஸ், காய்ச்சிய பால், மில்க் பவுடர், மாம்பழம் (மாம்பழத்தை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்) ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு வெளியே எடுத்து அதில் எலுமிச்சை சாறு, பிரெஷ் கிரீம் பைனாப்பிள் ஃபுட் கலர் சேர்த்து, திரும்பவும் மிக்ஸியில் ஒரு முறை அடித்து அவற்றை ஃப்ரீசரில் வைக்கவும். அதன்மீது வறுத்த கார்ன்ப்ளேக்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

* வெண்ணெய் க்ரிஸ்பி

வெண்ணெய் க்ரிஸ்பி
வெண்ணெய் க்ரிஸ்பி

தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்,  வெண்ணெய்-  அரைக் கப், உப்பு – சிட்டிகை,  பேக்கிங் பவுடர் - ஒரு ஸ்பூன்,  ஓமம் - ஒரு ஸ்பூன், பால் – அரைக் கப்.

இதையும் படியுங்கள்:
அவதிப்படுத்தும் குளிர்கால மார்பு சளிக்கு நிவாரணம்!
Traditional plum cake recipe!

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து நன்கு சலிக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்க்கவும். இதனுடன் உப்பு மற்றும் ஓமம் சேர்த்து, தேவையான பால் விட்டு, 10 நிமிடங்கள் கைவிடாமல் பிசையவும். ட்ரேயில் வெண்ணெய் தடவி சற்று உயரம் குறைவாக (ஒன்றரை அங்குல குறுக்களவு) உள்ள மூடியில் மிருதுவாக நிரப்பி ட்ரெயில் கவிழ்க்கவும். (மூடியில் வெண்ணெய் தடவிக்கொள்வது அவசியம்) ஒவ்வொன்றின் மீதும் வறுத்த முந்திரி அல்லது பிஸ்தா ஒன்று வைத்து பேக் செய்ய… அசத்தலான சுவையில் வெண்ணெய் க்ரிஸ்பி ரெடி.

* சாக்லேட் கேக்

 சாக்லேட் கேக்
சாக்லேட் கேக்

தேவையானவை:

மைதா - 200 கிராம்,  சர்க்கரை - 150 கிராம்,  வெண்ணெய் - 100 கிராம்,  பால் - 100 மில்லி , பேக்கிங் பவுடர் - - டீஸ்பூன், பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்,  முட்டை – இரண்டு,  உலர் திராட்சை - 50 கிராம்,  கொக்கோ பவுடர் -
கிராம்.

செய்முறை:

மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் கோகோ பவுடர் ஆகியவற்றை நன்கு கலந்து, பிறகு சலித்துக் கொள்ளவும்.

முட்டை, சர்க்கரை மற்றும் வெண்ணெய்யை நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு இதனுடன் மைதா சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். பால் மற்றும் உலர் திராட்சையை சேர்த்துக்கொள்ளவும். இதை வெண்ணெய் தடவிய பேக்கிங் டிஷ்ஷில் வைத்துபிறகு அவனில் வைத்து ஆறியதும் எடுக்கவும்.

சுலபமான கேக்குகளைத் தயாரித்து கிறிஸ்துமஸை கொண்டாடுவோம்.

கேக் செய்யும்போது... சில Do's & Don't

கேக் அல்லது பிஸ்கட் ரெடி ஆனவுடன், ஓவனில் இருந்து உடனடியாக எடுக்கக்கூடாது. சிறிது நேரம் அந்தச் சூட்டிலேயே வைக்கவேண்டும். அப்போதுதான் சரியான பதத்தில் கேக் கிடைக்கும்.

புதிய பேக்கிங் பவுடர் மட்டுமே உபயோகிக்க வேண்டும். கேக் கலவையானது கேக் செய்யும் பாத்திரத்தில் பாதி உயரத்திற்கு மேல் இருப்பது அவசியம்.

கேக் ரெடியாகிவிட்டதா... ரெடியாகிவிட்டதா... என்று அவ்வப்போது 'அவனை' திறந்து பார்க்கக்கூடாது. கேக் நடுவில் அது ஓட்டை விழச் செய்துவிடும். எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது. மாவில் வெண்ணெய், சர்க்கரை, சேர்ந்த கலவையை மெதுவாக ஊற்றி, விரல் நுனிகளாயே லேசாக கலக்கவேண்டும். (கலப்பதில் அவசரம் இருக்கக்கூடாது). அதேசமயம் சப்பாத்திக்கு மாவு செய்வதுபோலவும் பிசைந்து விடக்கூடாது.

கேக் தயாரிக்க உபயோகிக்கும் மைதா மாவு, வெண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் நல்ல தரமாக இருப்பது அவசியம். அதே சமயம் அளவு மிகச் சரியாக இருக்கவேண்டும். எல்லாம் சரியாக இருந்தால்தான் கேக் சரியாக வரும்.

முக்கியமாக (அளவுகளில் குறிப்பிட்ட) பேக்கிங் பவுடர், சோடா உப்பு போன்றவற்றை மிகச் சரியான அளவில் உபயோகப்படுத்த வேண்டும் (அதிகமாகவோ குறைவாகவோ உபயோகிக்கக் கூடாது)

அவனை நன்கு சூடாக்கியபிறகு கேக் கலவையை உள்ளே வைக்க வேண்டும். சூடாக்கத் தவறினால் கேக் மிருதுவாக புஸ் என்று வராது. (சில நேரம் எண்ணெயில் ஊறிய பலகாரம்போல் ஆகிவிடும்.)

அதேபோல் அதிக வெப்பமும் கூடாது. குறைவான வெப்பமும் கூடாது. மிகச் சரியாக மிதமான வெப்பத்திலேயே பேக் செய்வது அவசியம்.

கேக் கலவை மிருதுவாகவும் லேசாகவும் இருக்கவேண்டும். கெட்டியாக இருக்கக்கூடாது கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சமாக பால் சேர்த்துக்கொள்ளலாம்.

டிரை ஃப்ரூட்ஸ் கேக் செய்வதாக இருந்தால் கேக் கலவையுடன் சேர்ப்பதற்கு முன்பாக இவற்றின் மீது சிறிதளவு உலர்ந்த மாவு சேர்த்து பிசறி பிறகு சேர்க்கவேண்டும். அப்போதுதான் நட்ஸ் கேக் கலவையில் பரவலாக பரவும். இல்லை என்றால் ட்ரை ஃப்ரூட்ஸ் கேக்கின் அடியில் தங்கிவிட நேரிடும்.

கேக் செய்வது உண்மையிலேயே சற்று சிரமமான காரியம்தான். ஆனால், முயற்சி செய்தால்… விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com