

முளைக்கீரை இட்லி
முளைக்கீரை-1 கட்டு,
மிளகுத்தூள்-1/2டீஸ்பூன்,
உப்பு-தேவையான அளவு,
புளி-சிறிதளவு,
மாங்காய் இஞ்சி- சிறிதளவு
கரைத்து, அரைத்த விழுது)
எண்ணெய்-1 டீஸ்பூன்,
இட்லிமாவு- அரை கிலோ,
கடுகு- சிறிதளவு,
கறிவேப்பிலை- சிறிதளவு.
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பின் முளைக்கீரை, உப்பு சேர்த்து வதக்கி, மிளகுத்தூள் போட்டு, இஞ்சி, அரைத்த விழுதை இட்லி மாவோடு சேர்த்து கலக்கி இட்லித் தட்டில் ஊற்றி வேக வைக்கவும். சுவையான முளைக்கீரை இட்லி ரெடி.
முளைக்கீரை துவையல்
தேவை:
முளைக்கீரை (சுத்தம் செய்து நறுக்கியது) – அரை கட்டு
மிளகு – ஒரு டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உடைத்த உளுந்து – 4 டீஸ்பூன்
உப்பு, மஞ்சள் தூள் – சிறிது
பெருங்காயம் – ஒரு கட்டி
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
முளைக்கீரை, உப்பு, மிளகு, உளுந்து, மஞ்சள்தூள், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் நன்றாக வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு, புளி சேர்த்து அரைக்கவும். சுவையான, சத்தான முளைக்கீரை துவையல் ரெடி.
முளைக்கீரை பொரித்த குழம்பு
தேவை:
முளைக்கீரை - ஒரு சிறிய கட்டு,
மிளகு - 6,
தனியா - ஒரு டீஸ்பூன்,
வர மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு கப்,
சீரகம் - ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு - 4 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். பருப்பும் கீரையும் வெந்த பிறகு உப்பு சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான முளைக்கீரை பொரித்த குழம்பு தயார். சூடான சாதத்தில் நெய்விட்டு இந்த குழம்பு சேர்த்து சாப்பிட, சுவை அள்ளும்.
முளைக்கீரை பச்சடி
தேவை:
முளைக்கீரை - 1 கப்,
புளி - எலுமிச்சம்பழ அளவு,
கடுகு - 1 ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் ஒன்று,
வெல்லம் - 100 கிராம்,
எண்ணெய் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் நறுக்கிய முளைக்கீரையை வேகவிட்டு நன்கு மசிக்கவும். மசித்த கீரையுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்து, சிறிதளவு நேரம் கொதிக்கவிட்டு பொடித்த வெல்லம் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்த உடன், எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து சேர்த்து இறக்கவும். சுவையான, சத்தான முளைக்கீரை பச்சடி தயார்.