உங்கள் தேநீரை (Tea) உச்சபட்ச சுவைக்கு கொண்டு செல்வது எப்படி?

Tasty tea
Tasty tea
Published on

பெரும்பாலானவர்களின் வீடுகளில் சாய் அதாவது டீ (Tea) என்பது அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்த ஒரு பானமாகும். நாளின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு ஆறுதலான மற்றும் உற்சாகத்தை அளிக்கும் பானம் தான் இந்த டீ. ஏழை முதல் கோடீஸ்வரன் வரை எல்லோருக்குமே புத்துணர்ச்சி அளிக்க கூடியது இந்த டீ தான். அதுவும் குறிப்பாக மழை காலத்தில் டீ (Tea) குடிக்கும் சுகமே தனி தான். மாலை நேரத்தில் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு பருகும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.

ஆனால் இந்த டீ (Tea) தயாரிக்கும் முறையானது வீட்டிற்கு வீடு வேறுபடும். நாயர் கடை சாயா ரொம்ப ஸ்பெஷலாகவே இருக்கும். நாம் சாய் பண்ணும் விதத்தில் ஒரு சிறிய மாற்றங்களை செய்யும் போது, அதன் சுவை மட்டுமல்ல, தேயிலையின் ஆரோக்கிய நன்மைகளும் அதிகரிக்கும்.

சுகாதார ஊட்டச் சத்து நிபுணரும், நீரிழிவு கல்வியாளருமான குஷி சாப்ரா அவர்கள் டீயை கொதிக்க வைக்கும் போது அதை ஒரு ஒரு மூடி போட்டு மூடி வைக்குமாறு அறிவுறுத்துகிறார். மேலும் அவ்வாறு செய்வதால் என்ன பயன் நமக்கு கிடைக்கும் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில், இந்த எளிய முறையை பின்பற்றுவதால், தேநீரில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களின் ஊட்டச்சத்து மதிப்பைப் பாதுகாக்க உதவுவது மட்டுமல்லாமல், சுவையையும் மேம்படுத்துகிறது, நறுமணத்தைப் தக்க வைக்கிறது மற்றும் என்று ஊட்டச்சத்து நிபுணர் விளக்கினார். "இந்த சிறிய மாற்றம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் ஆதரிக்கும். இதற்காக நீங்கள் அதிகமாக சிரமப்பட தேவையில்லை" என்றும் அவர் வலியுறுத்தினார்.

குஷி அவர்களின் கூற்றுப்படி, தேயிலை இலைகளில் கேட்டசின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இவை வெப்ப உணர்திறன் கொண்டவை மற்றும் ஆவியாகும் தன்மை கொண்டவை. ஆகவே, டீயை மூடி வைக்காமல் விட்டால் அவை நீராவியுடன் வெளியேறும். மூடி வைப்பதால் உங்கள் கோப்பையில் அவற்றைத் தக்கவைக்க முடியும்.

ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, “ இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, பட்டை போன்றவற்றை நாம் வழக்கமாக சாயில் போடுவதுண்டு. இந்த மசாலாப் பொருட்கள் அனைத்துமே சாயின் நறுமணத்தையும், செரிமான நன்மைகளையும் தரும் அத்தியாவசிய எண்ணெய்களை வெளியிடுகின்றன. இந்த ஆவியாகும் எண்ணெய்கள் மூடப்படாவிட்டால் நீராவியில் எளிதில் இழக்கப்படும்.” என்று அவர் மேலும் வலியுறுத்திகிறார்.

இதையும் படியுங்கள்:
தேயிலை பள்ளத்தாக்குகளில் வாழும் 'முண்டா' பழங்குடியினர்: வாழ்க்கையின் பின்னால் இருக்கும் சுவாரஸ்யங்கள்!
Tasty tea

மேலும், “தேநீர் கொதிக்கும் போது மூடி வைப்பதால், உங்கள் உடலுக்கும், குடலுக்கும் நல்லதல்லாத அதிகப்படியான Tannins -ஐ குறைக்கிறது. Tannins என்பது ஆக்சிஜனேற்ற சேர்க்கைகளாகும். திறந்த கொதிநிலையில் தேநீரானது ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் தேநீர் கருமையாகவும், கசப்பாகவும் மற்றும் tannins அதிகமாகவும் இருக்கும். இது சில நேரங்களில் வயிற்றை எரிச்சலடையச் செய்து அமிலத்தன்மையை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
களரி: இப்போர்கலையை உருவாக்கியது யார்? பரசுராமரா? குறுமுனி அகத்தியரா?
Tasty tea

அதாவது அவரின் கூற்றுப்படி டீயை மூடி வைத்து கொதிக்க வைத்தால் சுவையாகவும், நறுமணத்தோடும் இருக்கும். மேலும் நம்முடைய மசாலா சாய் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com