இனிமே காய்கறி தோல்களை இப்படி சமைச்சுப் பாருங்க, சூப்பரா இருக்கும்!

Vegetable Peels
Vegetable Peels
Published on

இல்லத்தரசிகள் பலரும் தங்கள் வீடுகளில் காய்கறி கழிவுகளை குப்பைகளில் தான் கொட்டுகின்றனர். இவ்வுலகில் வீண் என எதுவும் இல்லை. குப்பைகளைக் கூட நாம் சரியான முறையில் கையாண்டால் இலாபம் கிடைக்கும். அவ்வகையில், வீடுகளில் குப்பை என ஒதுக்கப்படும் காய்கறிகளின் தோல்களை நாம் பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம். காய்கறிகளின் தோல்களை சேமித்து வைத்து வீட்டுத் தோட்டத்திற்கு உரமாகவோ அல்லது சில வகையான உணப்பொருள்களைத் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். காய்கறிகளை விட காய்கறி தோல்களில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், காய்கறி தோல்களை சரியாகப் பயன்படுத்துவதால், உங்கள் சமையலறைக் கழிவுகளையும் குறைத்து விடலாம். காய்கறி தோல்களை பயன்படுத்தி என்னவெல்லாம் சமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

சூப்களில் பயன்படும் காய்கறி தோல்:

பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் வெங்காயம் போன்ற காய்கறிகளில் இருந்து தோலைச் சேமித்து, மிகவும் சுவையான காய்கறி சூப்பைத் தயாரிக்கலாம். சுவையூட்டிகள் மற்றும் மூலிகைகள் கொண்ட தண்ணீரில் காய்கறி தோல்களை வேக வைத்து கிடைக்கும் திரவத்தை வடிகட்டினால், காய்கறி தோல் சூப் கிடைக்கும்.

சட்னி:

காய்கறித் தோல்களை குப்பையில் வீசுவதற்கு பதிலாக அதனை பயனுள்ள வழியில் பயன்படுத்தலாம். அதாவது மிகவும் எளிய முறையில் வீட்டில் சட்னியைத் தயார் செய்வதாகும். இந்திய உணவுகளில் காய்கறி தோல்களை பயன்படுத்தும் பாரம்பரிய வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும். ஆகவே, இனிமேல் காய்கறி தோல்களை தூக்கி வீசாமல், சுவையான சட்னியை செய்து விடுங்கள்.

வறுத்தல்:

கத்தரிக்காய், சீமை சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றின் காய்கறி தோல்களை வதக்கி வறுத்தெடுக்கலாம். இவற்றை மிக மெல்லிய கீற்றுகளாக வெட்டி இறைச்சி, சாஸ் மற்றும் மசாலாப் பொருள்களுடன் சேர்த்து சமைக்கலாம்.

சிப்ஸ்:

உருளைக் கிழங்கு தோல்கள் மற்றும் பிற வேர் வகைக் காய்கறிகளின் தோல்களைக் கூட மிருதுவான தின்பண்டங்களாக மாற்றி விடலாம். இவற்றின் தோல்களை சிறிதளவு எண்ணெய் விட்டு, உப்பு மற்றும் மசாலாப் பொருள்களைப் போட்டு, அவை பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரையில் எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
உரமாகும் பூசணிக்காய் தோல்: வீட்டுத் தோட்டத்தில் உதவுவது எப்படி?
Vegetable Peels

ப்யூரிகள் மற்றும் சூப்களில் கலக்க:

சுவை மற்றும் ஊட்டச்சத்துகளைச் சேர்ப்பதற்காக காய்கறி தோல்களை ப்யூரி மற்றும் சூப்களில் கலந்து விடலாம். எடுத்துக்காட்டாக, ப்ரோக்கோலி தண்டுகள் மற்றும் கேரட்டின் தோல்களை ஒரு காய்கறி சூப்பில் கலக்கலாம். மிருதுவான நிலைத் தன்மையை அடைவதற்கு, கலப்பதற்கு முன்னதாக தோல்கள் நன்றாக சமைத்து மென்மையாக இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இல்லத்தரசிகளே இனியாவது காய்கறி தோல்களை சரியாக கையாளுங்கள். இவற்றை குப்பை என வீணாக்க வேண்டாம். காய்கறி தோல்களை உணவுப் பொருள்களாக சமைக்கா விட்டாலும், செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்வதால் வீட்டில் சேரும் குப்பையின் அளவு நிச்சயமாக குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com