வாழைத்தண்டை இப்படி செஞ்சு பாருங்க! உடலுக்கு ஆரோக்கியம், சுவையில் புதுமை!

banana stem for health
healthy banana stem recipes
Published on

வாழைத்தண்டு சாலட்

தேவையானது:

நார் நீக்கி நறுக்கிய இளசான வாழைத்தண்டு - 1கப்

பொடியாக நறுக்கிய குடைமிளகாய் விதை நீக்கியது - 1/4 கப்

மாதுளை முத்துக்கள் - 1/4 கப்

வெங்காயத்தாள் - 1/4 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்.

உப்பு - தேவைக்கு.

அலங்கரிக்க

கொத்தமல்லித்தழை, புதினா - சிறிது

செய்முறை:

அனைத்து பொருட்களையும் பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைசாறு, நறுக்கிய புதினா, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.சிறுநீர் சுருக்கு குணமாகும்.

வாழைத்தண்டு ரைத்தா

தேவையானது:

நார் நீக்கிய வாழைத்தண்டு - ஒரு கப் 

சின்ன வெங்காயம் -கால் கப்

விதைநீக்கிய தக்காளி - ஒன்று 

மாதுளை முத்துக்கள் -கால் கப் 

தயிர் - இரண்டு கப் 

இஞ்சி துருவல் -ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் ரெண்டு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

கொத்தமல்லி தழை - சிறிது

உப்பு -தேவைக்கு

இதையும் படியுங்கள்:
சர்க்கரைவள்ளி கிழங்கில் 4 விதமான அசத்தல் ரெசிபிகள்! - சாதம் முதல் சாம்பார் வரை!
banana stem for health

செய்முறை:

நறுக்கிய வாழைத்தண்டு, பச்சை மிளகாய் இஞ்சி சீரகத்தூள் சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை போட்டு நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி / மாதுளை முத்துக்கள் தயிர் உப்பு சேர்த்து நன்றாக கிளறி மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

சப்பாத்தி, பிரியாணிக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். சிறுநீரக கல்லை கரைக்கும் சக்தி வாழைத்தண்டுக்கு உண்டு. குடலில் சிக்கியுள்ள முடி, நச்சு உள்ளிட்டை வெளியேற்றும் தன்மை உண்டு.

வாழைத்தண்டு துவையல்

தேவையானது;

லேசான நார் நீக்கி நறுக்கிய வாழைத்தண்டு - கால் கப்

தேங்காய் துருவல் -கால் கப்

பச்சை மிளகாய் -காய்ந்த மிளகாய் - இரண்டு

கறிவேப்பிலை -ஒரு கைப்பிடி

பெருங்காயம் -சிறிது

இஞ்சி -ஒரு துண்டு

புளி -சிறிது 

வெள்ளை எள் - கால் கப்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

இதையும் படியுங்கள்:
ரெஸ்டாரன்ட் சுவைக்கு பின்னால இப்படி ஒரு ட்ரிக்கா? 10 காரணங்களை தெரிஞ்சு சமையல்ல சிக்ஸர் அடிங்க!
banana stem for health

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். பின்னர் கடுகு, உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டி பரிமாறவும்.

இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். சிறுநீரக கல்லை போக்கவும் சர்க்கரை நோயை வர விடாமல் தடுக்கும் சக்தி வாழைத் தண்டுக்கு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com