இப்படி செய்து பாருங்கள் எலுமிச்சை இனிப்பு ஊறுகாயை!

எலுமிச்சை ஊறுகாய்...
எலுமிச்சை ஊறுகாய்...Image credit - cookbook.pfeiffer.net.au

ச்சில் ஊறவைக்கும் உணவு வகைகளில் ஊறுகாய் அனைவரும் விரும்பும் ஒன்று. விதவிதமான சுவைகளில் தற்போது எளிதாக கிடைக்கிறது.  ஆனாலும் அன்றிலிருந்து இன்றுவரை ஊறுகாயின் அடிப்படையாக இருப்பது எலுமிச்சம் பழங்களே. எலுமிச்சை ஊறுகாயை பலரும் விரும்பி சாப்பிடுவதை பார்த்திருப்போம்.

மேலும் எலுமிச்சையில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் சி மற்றும் பாலிமெத்தாக்ஸிஃப்ளேவோன்கள் போன்ற பாலிஃபீனால்கள் நிரம்பியுள்ளதால் தொண்டை வலி
சிறுநீரக கற்கள் செரிமானம் நீரிழிவு அதிக எடை  போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணமாகிறது. இந்தப் பழத்தை தவறாமல் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை பழத்தில் இத்தனை நன்மைகள் இருப்பதால் இதில் செய்யப்படும் ஊறுகாய்களை குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி உண்கிறோம்.

ஊறுகாய் என்றாலே காரம் மட்டும்தானா இல்லை நாவில் நீர் சுரக்க வைக்கும் இனிப்பான ஊறுகாய்களும் உண்டு. இதோ எலுமிச்சம்பழத்தில் எப்படி இனிப்பு ஊறுகாய் செய்வது என்று பார்ப்போம். இதில் இரண்டு வகைகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன் செய்து பார்த்து அசத்துங்கள்.

இனிப்பு எலுமிச்சங்காய் ஊறுகாய்; 

 தேவை;

எலுமிச்சம்பழம் - 10
சர்க்கரை -2 கப்
பச்சை மிளகாய்கள்- 10
உப்பு - ஒரு கைப்பிடி அல்லது தேவைக்கு நல்லெண்ணெய்-இரண்டரை டே.ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கு
கடுகு - ஒரு ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஏற்றம் நிச்சயம்!
எலுமிச்சை ஊறுகாய்...

செய்முறை:
தேவையான தண்ணீரில் உப்பு போட்டு அடுப்பில் வைத்துக் கொதித்த பின் எலுமிச்சம் பழத்தை போட்டு நன்றாக வேகவைக்க வேண்டும் தண்ணீர் பாதி சுண்டியதும் எலுமிச்சம் பழங்கள் வெடித்து அதில் உள்ள சாறும் கொஞ்சம் தண்ணீருடன் கலந்து வரும் ..கலவை ஆறியதும்  நல்ல சுத்தமான ஜாடியில் ஊற்றி சர்க்கரையைக் கலந்து வினிகரையும் ஊற்றி கரண்டியால் கலந்தது விட்டு வெள்ளை துணியால் சுற்றி மூடி கட்டி விடவும். ஒரு வாரம் கழித்து ஒரு தரம் கிளறி விட்டு மறுபடியும் மூடி கட்டி வைக்கவும். அதன் பின்னர் ஒரு வாரம் கலந்து திறந்து நன்கு கலந்து விட்டால் சர்க்கரையும், வெந்த எலுமிச்சம்பழமும் நன்றாக கலந்து மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு- பொதுவாகவே ஊறுகாய் வகைகளில் கைகள் படக்கூடாது. விரைவில் கெட்டுவிடும் வாய்ப்புண்டு. இதில் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரையும் சேர்க்கலாம். இனிப்பு என்பதால் பெருங்காயம் சேர்க்க வேண்டியதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com