ஒருமுறை ஒயிட் சாஸ் பாஸ்தா செய்து பாருங்க… அப்பறம் விடவே மாட்டீங்க!

ஒயிட் சாஸ் பாஸ்தா
ஒயிட் சாஸ் பாஸ்தா

‘ஒயிட் சாஸ் பாஸ்தா’ என்பது சாதாரண பாஸ்தாவையும் அதனுடன் கிரீமி பால் கொண்டு செய்யப்பட்ட சாஸையும் உடைய ஒரு உணவு வகையாகும். இதை ‘பெச்சமல் சாஸ்’ என்றும் அழைப்பர். பாஸ்தா உருவான இடம் இத்தாலி மற்றும் பிரான்சு ஆகும். இதை ‘மதர் சாஸ்’ என்றும் கூறுவர். மதர் சாஸ் என்று கூறப்படும் ஐந்து வகையான சாஸ்களுள் இதுவும் ஒன்றாகும்.

ஒயிட் சாஸ் பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்:

பாஸ்தா-100கிராம்.

வெண்ணை-1 தேக்கரண்டி.

நறுக்கிய பூண்டு-2

நறுக்கிய மஸ்ரூம்-6

பச்சை பட்டாணி-1/4கப்.

சோளம்-1/4 கப்.

குடைமிளகாய்-1/2 கப்.

ஒயிட்சாஸ் செய்ய,

மைதா மாவு-2 தேக்கரண்டி.

வெண்ணை-2 தேக்கரண்டி.

பால்-2கப்.

துருவிய சடார் சீஸ்-1/4 கப்.

பேசில் இலை பவுடர்-1/4 தேக்கரண்டி.

சில்லி பிளேக்ஸ்- ¼ தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு

ஒயிட் சைஸ் பாஸ்தா செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பிறகு அதில் 100 கிராம் பாஸ்தாவை சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைக்கவும். அதன் பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பாஸ்தா மீது கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள் அப்போதுதான் காயாமல் இருக்கும்.

இப்போது ஒரு ஃபேனை எடுத்து கொண்டு அதில் 1 தேக்கரண்டி வெண்ணையை சேர்த்துக் கொள்ளவும். இப்போது பொடியாக நறுக்கிய 2 பூண்டு சேர்த்து கொள்ளவும். பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு 6 நறுக்கிய மஸ்ரூமை சேர்த்து கொள்ளவும். மஸ்ரூம் நன்றாக வதங்கியதும். 1/4கப் பச்சை பட்டாணி, ¼ கப் சோளம், ½ குடை மிளகாய் , தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.இப்போது 2 நிமிடம் வேகவைத்து எடுத்து வைத்து விடவும்.

இதையும் படியுங்கள்:
அமைதியான வாழ்க்கையை எது கற்றுக் கொடுக்கும் தெரியுமா?
ஒயிட் சாஸ் பாஸ்தா

இப்போது ஒயிட் சாஸ் செய்வதற்கு ஒரு ஃபேனில் இரண்டு தேக்கரண்டி வெண்ணையை உருக்கிக் கொண்டு அதில் 2 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து கலக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும். இல்லையேல் மாவு தீய்ந்து போய்விடும். மாவின் பச்சை வாசனை போன பிறகு, அதில் 2 கப் பால் சேர்த்துக் கொள்ளவும். இப்போது நன்றாக கலக்கவும். சிறிது நேரம் கழித்து பால் கிரீமியாக மாறும். அப்போது அதில் ¼ கப் வெள்ளை சடார் சீஸ் துருவியதை சேர்க்கவும். பிறகு நாம் வேகவைத்திருக்கும் காய் மற்றும் பாஸ்தாவையும் சேர்க்கவும். அத்துடன் காய்ந்த பேஸில் இலை பவுடர் ¼ தேக்கரண்டி, சில்லி பிளேக்கஸ் ¼ தேக்கரண்டி. கடைசியாக தேவையான அளவு உப்பு, மிளகு சேர்த்து நன்றாக கலக்கவும். அவவ்ளவு தான் சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா தயார். நீங்களும் வீட்டில் டிரை பண்ணி பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com