செம டேஸ்ட்டான கேரளா ஸ்டைல் களத்தப்பம் செஞ்சி பாருங்க!

கேரளா ஸ்டைல் களத்தப்பம்...
கேரளா ஸ்டைல் களத்தப்பம்...www.youtube.com

கேரளா மலபார் பக்கம் களத்தப்பம் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகையாகும். முக்கியமாக கன்னூர், மலப்புரம், காசர்கோட் போன்ற இடங்களில் மிகவும் பிரபலமாகும். ‘குக்கர் கேக்’ என்று அழைக்கப்படும் இதை சுலபமாகவும் குறைந்த நேரத்திலும் செய்து எல்லோரையும் அசத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கேரள ஸ்டைல் களத்தப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க!

களத்தப்பம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 1கப்.

வெல்லம்-1கப்.

ஏலக்காய்- 2.

வடித்த சாதம்- 2 தேக்கரண்டி.

தேங்காய் எண்ணை- 2 தேக்கரண்டி.

சிறிதாக வெட்டிய தேங்காய்- தேவையான அளவு.

உப்பு- ½ தேக்கரண்டி.

களத்தப்பம் செய்முறை விளக்கம்:

முதலில் 1கப் பச்சரிசியை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக்கொள்ளவும். இப்போது ஊற வைத்த அரிசியை மிக்ஸியில் போட்டு  அத்துடன் 2 தேக்கரண்டி வடித்த சாதம், 2 ஏலக்காய் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் வெல்லம் 1கப் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கரையும் வரை கிண்டவும். வெல்லம் கரைந்த பிறகு அதை வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது அரைத்து வைத்த அரிசியில் வடிகட்டி வைத்த வெல்லத்தை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கி உப்பு ½ தேக்கரண்டி சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
மாயம் செய்யும் முருங்கைக்கீரை நீர்.. இவ்வளவு விஷயம் இருக்கா இதுல?
கேரளா ஸ்டைல் களத்தப்பம்...

இப்போது குக்கரை அடுப்பில் வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணை ஊற்றி அதில் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் தேங்காயை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுக்கவும். தேங்காய் நன்றாக பொன்னிறமாக ஆனதும் அதில் கலக்கி வைத்திருக்கும் அரிசி மற்றும் வெல்ல கலவையை ஊற்றி குக்கரை விசில் போடாமல் மூடி 10 நிமிடம் நன்றாக வேக விடவும். இப்போது குக்கரை திறந்து அதில் டூத் பிக்கை வைத்து குத்திப்பார்க்கவும். மாவு டூத் பிக்கில் ஒட்டவில்லை என்றால் நன்றாக வெந்து விட்டது என்று அர்த்தம்.

களத்தப்பம் வெந்ததும் உடனே குக்கரிலிருந்து இறக்காமல் மூடியை திறந்து வைத்து சற்று நேரம் ஆற விடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் குக்கரை திருப்பி வைத்து தட்டினால் கேக் போன்று அழகாகவும் உடையாமலும் களத்தப்பம் வரும். இப்போது இதை வெட்டி பரிமாறவும். குழந்தைகள் கேக் வேண்டும் என்று கேட்டால், இதை செய்து தரவும் மிகவும் ருசியாகவும், சாஃப்டாகவும் இருக்கும் கேரளா ஸ்டைல் களத்தப்பம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com