Murungaikeerai Juice.
Murungaikeerai Juice.

மாயம் செய்யும் முருங்கைக்கீரை நீர்.. இவ்வளவு விஷயம் இருக்கா இதுல?

நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் சத்தான உணவுப் பொருட்களை நாம் சாப்பிட வேண்டியது அவசியம். குறிப்பாக காலை வேளையில் வெறும் வயிற்றில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்கொள்வது நல்ல பலனைத் தரும். வெறும் வயிற்றில் இந்த உணவுகளை உட்கொள்ளும்போது அதில் உள்ள சத்துக்கள் அப்படியே முழுமையாக உடலால் உறிஞ்சப்படும். அப்படி உடலுக்குத் தேவையான விட்டமின்கள், இரும்புச்சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களைக் கொண்ட ஒரு உணவுதான் முருங்கைக்கீரை. 

இந்த முருங்கைக்கீரை நமது பாரம்பரிய மருத்துவத்தில் பல நூறு ஆண்டுகளாக இருக்கிறது. இன்றளவும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல உடல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க முருங்கைக் கீரையை பயன்படுத்துகின்றனர். எனவே காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை நீர் குடித்து வந்தால், ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

  1. உடல் சோர்வு நீங்கும்: நீங்கள் அவ்வப்போது அதிக உடல் சோர்வை சந்திக்கிறீர்கள் என்றால், காலையில் டீ காபி குடிப்பதற்கு பதிலாக முருங்கைக்கீரை நீரை குடியுங்கள். இது உடலுக்கு தேவையான ஆற்றலைத் தந்து உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். 

  2. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது: முருங்கைக் கீரையில் விட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் ஏ, ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த கீரை நீரை நாம் தினசரி எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று, எலும்புகள் பற்கள் போன்றவை வலிமை பெறும். 

  3. உடலை தூய்மைப்படுத்தும்: நமது உடலில் உள்ள தேவையில்லாத அழுக்குகள் தினசரி வெளியேறுவது மூலமாக நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி உடலில் உள்ள தேவையில்லாத அழுக்குகளை வெளியேற்றும் தன்மை முருங்கைக்கீரை நீருக்கு உள்ளது. தினசரி ஒரு ஸ்பூன் முருங்கைக்கீரை பொடியை வெந்நீர் கலந்து காலை எழுந்ததும் குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, தலைமுடி, சருமம் என அனைத்துமே ஆரோக்கியமாக இருக்கும். 

  4. எடையை குறைக்க உதவும்: நீங்கள் பல நாட்களாக உங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தால், அதற்கு இந்த முருங்கைக்கீரை தண்ணீர் பயனளிக்கும். தினசரி காலையில் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை நீரை குடித்து வருவது மூலமாக உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவும். 

  5. செரிமானத்தை மேம்படுத்தும்: உங்களுக்கு அடிக்கடி செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டால் அதற்கு சிறந்த தீர்வாக இந்த முருங்கைக்கீரை நீர் இருக்கும். இதில் நிறைந்திருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, குடலியக்கத்தை சிறப்பாக மாற்றி, பல குடல் சார்ந்த பிரச்சினைகளைத் தடுக்கும். 

இதையும் படியுங்கள்:
இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை சட்னி எப்படி செய்வது தெரியுமா? 
Murungaikeerai Juice.

இப்படி பல ஆரோக்கிய நன்மைகள் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை நீரை குடிப்பதால் நமக்கு கிடைக்கிறது. எனவே இந்த அற்புத பானத்தை தினமும் காலையில் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com