பத்தே நிமிஷத்துல சத்தான வாழைப்பூ வடை இப்படி டிரை பண்ணுங்களேன்!

வாழைப்பூ வடை
வாழைப்பூ வடை

வாழைப்பூ பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் பெரும்பாலான வீடுகளில் பாட்டி மாமியார் இருந்தால் மட்டுமே வாழைப்பூவை நினைக்க முடியும். ஏனெனில் வாழைப்பூவை சுத்தம் செய்வதென்றால் சிறிது நேரம் மெனக்கிட வேண்டும் என்பதுதான். பூக்களில் உள்ள காம்புகள், நரம்புகளை எடுத்துவிட்டு அவற்றை சுத்தம் செய்வது என்பது சிலருக்கு பெரும் பாடாக இருக்கும். ஆனால் சிறிது நேரம் ஒதுக்கி இதை செய்தால் உடல் நலத்துக்கு ஆரோக்கியமாகவும், வாய்க்கு ருசியாகவும் ரெசிபி கிடைக்கும். வடை என்று முடிவு செய்ததும் கடலைப்பருப்பை ஊற வைக்கலாம். வாழைப்பூவை சுத்தம் செய்வதற்குதான் அரை மணி நேரம் தேவையே தவிர இந்த வடை செய்வதற்கு பத்து நிமிஷம் போதும்.

தேவையானவை: 
வாழைப் பூ - 1 கப் (ஆய்ந்து நறுக்கியது)
கடலை பருப்பு - 3/4 கப்
இஞ்சி - சிறு துண்டுகளாக
பூண்டு - 6 பற்கள்
சோம்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
வரமிளகாய் -3
பெரிய வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை -சிறிது
பெருங்காயத் தூள் -சிறிது
உப்பு -தேவையான அளவு
எண்ணெய்- பொறிக்க

செய்முறை:
டலைப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறியதும். நீரை வடித்து வைக்கவும். முழு வாழைப் பூவை நன்கு ஆய்ந்து அதில் இருக்கும் நரம்புகளை நீக்கிவிட்டு பூவை மட்டும் எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி புளிப்பு மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். (இதனால் பூ கறுத்துப் போகாது)  ஊறிய கடலை பருப்புடன் வரமிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். (அதிகம் நீர் விடாமல்). கெட்டியாக எடுக்கும் நேரத்தில் சோம்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றி  அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தம் போக்கி சீரான தூக்கத்தைத் தரும் ஜாதிபத்திரி!
வாழைப்பூ வடை

அடுப்பில் கடாய் வைத்து தேவையான எண்ணெய் ஊற்றிக் காய்வதற்குள் கடலைப்பருப்பு மாவுக்கலவையில் பொடியாக அரிந்த (மோர் நீரைப் பிழிந்து) வாழைப்பூ, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயத்தூள் ஆகியவற்றை கலந்து கலந்து சிறு சிறு உருண்டைகளாக்கி காய்ந்த எண்ணெயில் வடைகளாகத் தட்டி போடவும். தீயை சற்று குறைத்து வடைகளை உடையாமல் இருபக்கமும் சிவக்க திருப்பி விட்டு எடுக்க வேண்டும்.

சூப்பரான ஹெல்தியான வாழைப்பூ வடை ரெடி. சுடச்சுட தேங்காய் சட்னி அல்லது சும்மா சாப்பிட்டாலே டேஸ்ட் அள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com