உங்கள் சமையலறையில் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சுப் பாருங்க... அப்பறம் நீங்கதான் கிச்சன் குயின்!

Modular kitchen
How minor changes in the kitchen makes you a kitchen queen?Image Credits: Johwan doh, DDS
Published on

பெண்களுக்கு சமையலறையை பராமரிப்பது என்பது மிகப்பெரிய சவாலாகும். வேலை செய்யும்போது எதை எந்த இடத்தில் வைத்தோம் என்பதை தேடி எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அத்தகைய பிரச்சனையை போக்கி கிச்சனை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க சில மாற்றங்கள் செய்தால் போதும் என்று சொன்னால் நன்றாக இருக்குமில்லையா? அதை பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

கட்லெரி டிரே (Cutlery tray)

கட்லெரி டிரே உங்களுடைய கிச்சனை ஒழுங்காக பராமரிப்பதற்கு பயன்படுகிறது. இதில் பாத்திரங்கள், கரண்டி, கத்தி போன்ற பொருட்களை அழகாக அடுக்கி வைத்து கொள்ளலாம். இதனால் இடம் அடைத்து கொண்டிருக்கும் பிரச்சனை தீரும். எந்த பொருளை எங்கே வைத்தோம் என்ற பிரச்சனையில்லாமல் சுலபமாக கையாளலாம்.

பிளைன் பேஸ்கெட் (Plain basket)

இந்த பேஸ்கெட் பிளைன்னாகத்தான் இருக்கும். அதனால் பானை, தவா, பாட்டில், கன்டெயினர், கப், பிளேட்ஸ், ஃபேன் போன்றவற்றை வைத்து கொள்ளலாம். இது பொருட்களை சேமித்து வைப்பதற்காக பயன்படுகிறது.

தாலி பேஸ்கெட் (Thali basket)

இது தட்டுக்களை அடுக்கி வைப்பதற்காக பயன்படுகிறது. இதனுடைய எடை கம்மியாகவும், அதிகமாக எடைத்தாங்கும் சக்தியும், எடுத்து செல்வதற்கும் சுலபமாக இருக்கும். இதை கிச்சனில் Slide out முறையில் அமைத்திருப்பார்கள்.

ஆயில் புல் அவுட்(Oil pull out)

கிச்சனில் ஆயில் புல் அவுட் சின்ன சின்ன பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ள உதவுகிறது. எண்ணெய் பாட்டில், சாசர் போன்றவற்றை இதில் வைத்து கொள்ளலாம். இதில் இரண்டு வகை உண்டு Double basket oil pull out and triple basket oil pull out ஆகியவையாகும்.

கார்னர் சொலூசன்(Corner solution)

இது கிச்சனுடைய மூலைப்பகுதியில் அமைக்கப் பட்டிருக்கும். இங்கே வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை சுலபமாகவும், வேகமாகவும் எடுத்து பயன்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
சுமாரான வீட்டை சூப்பராக மாற்ற 5 எளிய ஆலோசனைகள்!
Modular kitchen

விக்கெர் பேஸ்கெட் (Wicker basket)

நிறைய காய்கறிகளை பிரிட்ஜ்ஜில் வைத்து சேமிக்க முடியாது. விக்கர் பேஸ்கெட் காற்றோட்டத்துடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பதால், இதில் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைத்து பயன்படுத்த முடியும்.

பேன்ட்ரி யுனிட் (Pantry unit)

இங்கே சமையலுக்கு தேவையான மசாலா பொருட்கள், பாஸ்தா, ஸ்நாக்ஸ் போன்றவற்றை சேமித்து வைத்து கொள்ள முடியும். இதை உங்கள் சமையலறையில் அமைப்பதால், உங்கள் கிச்சன் பார்ப்பதற்கு ஒழுங்காகவும், சீராகவும் இருப்பது மட்டுமில்லாமல், அழகியலுடனும் காட்சித்தரும்.

இந்த விஷயங்களை மட்டும் உங்கள் சமையலறையில் மாற்றி அமைத்து பாருங்கள். அப்பறம் என்ன? நீங்கதான் உங்கள் வீட்டின் சமையலறை ராணி. முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com