நாம் வசிக்கும் வீடு பார்ப்பதற்கு பிரம்மாண்டமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான ஒன்றுதான். அப்படி அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான செலவை சிக்கனமாகவும் செய்ய வேண்டும் என்றும் எண்ணுவார்கள். நம் வீட்டில் அதிக செலவே இல்லாமல் செய்யப்படும் குட்டி குட்டி மாற்றங்கள் வீட்டை வேற லெவலில் மாற்றிவிடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அவற்றைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.
1. கதவு கைப்பிடிகள் (Door knobs and handles): பழைய மாடல் அலுத்துப்போன கைப்பிடிகளையே வீட்டின் கதவுகளுக்கு வைப்பதை விட்டுவிட்டு. தற்போது சந்தையில் டிரெண்டிங்காக வந்திருக்கும் புதுவிதமான கதவு கைப்பிடிகளை வீட்டிற்கு வைப்பதால் வீடு பார்ப்பதற்கு ஆடம்பரமாகவும், பிரம்மாண்டமாகவும் தெரியும்.
2. ஸ்விட்சஸ் (Switches): தற்போது சந்தையில் அட்டோமேட்டட் ஸ்விட்சஸ் (Automated switches) விற்பனைக்கு வந்துள்ளது. இதை நம்முடைய போன் மூலம் கூட இயக்க முடியும். அப்படியில்லை என்றாலும் சாதாரணமான ஸ்விட்சஸ்ஸை கொஞ்சம் மார்டனாக வாங்கி வீட்டில் பொருத்துவது வீட்டின் லுக்கை மாற்றியமைக்கும்.
3. வால் ஆர்ட் பிரேம் (Wall art frames): வீட்டில் Wall art frames மாட்டுவது ஆடம்பரமான தோற்றத்தை தரும். வெறுமனே தெரியும் சுவர்களில் இதுபோன்ற பிரேம்ஸை மாட்டி வைக்கும் போது. அது அந்த இடத்தின் தோற்றத்தையே மாற்றியமைத்து விடும். இதுபோன்ற wall art frames விலை குறைவாகவே ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
4. க்ரியேட்டிவ் லைட்ஸ் (Creative lights): வீட்டில் வித்தியாசமான லைட்களை மாட்டுவது வீட்டின் அழகைக் கூட்டுவதோடு மட்டுமில்லாமல். மார்டனாகவும் காட்டும். உதாரணத்திற்கு பார்ப்பதற்கு மேகம் மிதப்பது போல அமைந்திருக்கும் லைட் பல்ப்ஸ், நிலா பந்து போல அமைந்திருக்கும் லைட் போன்றவற்றை வீட்டில் வைப்பது க்ரியேட்டிவாக இருக்கும்.
5. செராமிக் க்ரியேட்டிவ்ஸ் (Ceramics creatives): வீட்டில் கண்ணாடியால் ஆன பொருட்களை மாற்றி விட்டு செராமிக்ஸ் பொருட்களை வைக்கும்போது வீட்டிற்கு அழகியலைத் தரும். பூந்தொட்டிகள், பிளேட்ஸ், பானை போன்றவற்றை செராமிக்ஸில் வைப்பது வீட்டின் அழகைக் கூட்டும்.
வீட்டினுடைய இன்டீரியர் டிஸைன் என்பது வீட்டை அழகாக மாற்றுவது மட்டுமில்லாமல், வீட்டில் நாமே பார்த்து பார்த்து செய்யும் புதுபுது மாற்றங்கள் நம் மனதிற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியை தரும். இந்த 5 சின்ன மாற்றங்களை உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். நீங்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு உங்கள் வீட்டின் தோற்றத்தை அது மாற்றியமைக்கும். முயற்சித்துதான் பாருங்களேன்.