Turkish பால் கேக்: ஒரு எளிய செய்முறை!

Turkish Milk Cake
Turkish Milk Cake: A Simple Recipe.
Published on

உலகம் முழுவதும் பல்வேறு சுவைகளில் இனிப்புகள் உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் தனித்துவமான சுவை மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தவை. அதில் துருக்கிய பால் கேக் ஒரு பிரபலமான மற்றும் சுவையான இனிப்பாகும். இது பால், சர்க்கரை மற்றும் மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தப் பதிவில் துருக்கிய பால் கேக் வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

கேக்கிற்கு:

  • 4 முட்டைகள்

  • 1 கப் (200 கிராம்) சர்க்கரை

  • 1/2 கப் (125 மில்லி) எண்ணெய்

  • 1 கப் (125 கிராம்) மைதா மாவு

  • 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

  • 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா

  • 1/4 தேக்கரண்டி உப்பு

  • 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ்.

பால் கலவைக்கு:

  • 1 1/2 கப் (375 மில்லி) பால்

  • 1/2 கப் (100 கிராம்) சர்க்கரை

  • 1/4 கப் (60 மில்லி) தண்ணீர்

  • 1/4 கப் (60 மில்லி) வெண்ணிலை சாரம்

கேரமல் சாஸுக்கு:

  • 1/2 கப் (100 கிராம்) சர்க்கரை

  • 1/4 கப் (60 மில்லி) தண்ணீர்

  • 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

அலங்கரிக்க:

  • நட்ஸ், தேங்காய், பழங்கள் (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப).

செய்முறை: 

முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டை மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும். பின்னர் அதில் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

இப்போது தனியாக ஒரு கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பை சேர்த்து கலக்கவும். பின்னர் அதில் முட்டை கலவை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி கேக் மாவு பதத்திற்கு தயாரிக்கவும். 

இந்த மாவை ஒரு கேக் பேனில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் நன்றாக வேகும் வரை 30 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். கேக் தயாரானதும் அதை குளிர்ச்சியடைய விடவும். 

இதையும் படியுங்கள்:
செட்டிநாடு பால் கொழுக்கட்டை - மைசூர் போண்டா செய்யலாம் வாங்க!
Turkish Milk Cake

பால் கலவை: ஒரு சிறிய வாணலியில் பால், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். கொதி வந்ததும் அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதை அடுப்பில் இருந்து இறக்கி குளிர்ச்சி அடைய விடவும். 

கேரமல் சாஸ்: கேரமல் சாஸ் தயாரிக்க ஒரு வாணலியில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். சர்க்கரை கரைந்து பொன்னிறமாக மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். 

இப்போது கேக்கை ஒரு தட்டில் வைத்து, பால் கலவையை கேட்கின் மேல் ஊற்றவும். பின்னர் கேரமல் சாஸை கேக்கின் மேல் சமமாகப் பரப்பவும். இறுதியாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நட்ஸ், உலர் பழங்கள், தேங்காய் போன்றவற்றை மேலே தூவி அலங்கரித்தால், சூப்பரான சுவையில் டர்கிஷ் பால் கேக் தயார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com