
எங்கள் வீடுகளில் புது மாப்பிள்ளையின் உணவுப் பட்டியலில் இடம்பெறும் மிக முக்கியமான உணவு இது.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – ½ கிலோ
உளுந்துப் பருப்பு – 400 கிராம்
பச்சரிசி – 150 கிராம்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
தயாரிக்கும் முறை:
அரிசி மற்றும் உளுந்துப் பருப்பை கழுவி, தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை கிரைடரில் (Grinder) போட்டு தண்ணீர் இல்லாமல் குருணையாக அரைக்கவும்.
பின்னர் உளுந்துப் பருப்பையும் தண்ணீர் இல்லாமல் நைசாக பந்து போல அரைக்கவும். அரைத்த அரிசி மாவும் உளுந்து மாவும் ஒன்றாக சேர்த்து, அதில் சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், கலந்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி, நன்கு பொரிந்து வந்ததும் திருப்பிப் போட்டு எடுத்தால், சுவையான தெல்ல அட்லு (வெள்ளைப் பணியாரம்) ரெடி! இதனை சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
அரிசிப் பாயசம்
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி / பச்சரிசி – 1 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலக்காய் – 6
முந்திரி, திராட்சை – சிறிதளவு
நாட்டுச்சர்க்கரை – 1 ½ கப்
தயாரிக்கும் முறை:
அரிசியை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்து, நைசாக அரைக்கவும். அரைத்த மாவை சிறிது நீர் சேர்த்து மோர் பக்குவத்தில் கலந்து வைத்துக்கொள்ளவும்.
தேங்காய் மற்றும் ஏலக்காயை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். அடிக்கனமான பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அதே பாத்திரத்தில் அரிசி மாவும், தேங்காய் விழுதும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும். அடிபிடிக்காமல் கவனமாக கிளறிக்கொண்டு இருக்கவேண்டும்.
பச்சை வாசனை போனதும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும். பாயாசம் கெட்டியானதும் இறக்கி, மேலே பொரித்த வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து பரிமாறலாம்.
இந்த அரிசிப் பாயசம் சூடாக இருக்கும்போது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.