Ugadi Pachadi Recipe: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அறுசுவை கலவை! 

Ugadi Pachadi Recipe
Ugadi Pachadi Recipe
Published on

தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி நாளன்று தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றுதான் உகாதி பச்சடி. வாழ்க்கை என்பது பல்வேறு சுவைகளைக் கொண்டது என்பதைக் குறிக்கும் விதமாக உருவாக்கப்படும் ஒரு சட்னி போன்ற உணவு. இந்த பச்சடி ஆறு சுவையுள்ள முக்கிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும்.

உகாதி தினத்தன்று காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு, முதல் வேலையாக இந்த பச்சடியை செய்து சாப்பிட்ட பிறகுதான் மற்ற உணவுகளை சாப்பிடுவார்கள். எனவே இந்த உகாதிக்கு நீங்களும் பச்சடி செய்து, மகிழ்ச்சியாக மற்றவர்களுடன் பகிர்ந்து சாப்பிடுங்கள். சரி வாருங்கள் இப்பதிவில் உகாதி பச்சடி எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • 1 கப் வேப்பம் பூ மொட்டு

  • 1 மாங்காய்

  • 2 ஸ்பூன் புளிச்சாறு

  • ¼ கப் வெல்லம்

  • 2 பச்சை மிளகாய்

  • ஒரு சிட்டிகை உப்பு

  • தண்ணீர் தேவையான அளவு

செய்முறை

முதலில் வேப்பம்பூவை நன்கு கழுவி தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்த பின்னர், தண்ணீரை வடிகட்டி வேப்பம்பூவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அதில் உள்ள அதிக கசப்புத்தன்மை நீங்கும். 

இதையும் படியுங்கள்:
Waxing செய்யும் முன் அறிய வேண்டிய 9 விஷயங்கள்.. இது தெரியாம வேக்சிங் செய்யாதீங்க!
Ugadi Pachadi Recipe

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய், புளிச்சாறு, வெல்லம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இப்போது வேப்பம்பூவை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இறுதியாக அந்தக் கலவையில் உங்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கினால், அறுசுவையும் அடங்கிய உகாதி பச்சடி தயார். 

இந்தப் பச்சடியை பிறருக்கு சாப்பிட கொடுப்பதற்கு முன் குறைந்தது ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால், அதன் சுவைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து நன்றாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com