டீயுடன் சேர்த்து இந்த 'வட பாவ்' சாப்பிட்டால், சொர்க்கமே நம் கையில் தான்!

Vada Pav recipe in tamil
Vada Pav recipe in tamilImge credit: Great British Chef

இந்தியாவின் பிரபலமான உணவாக மாறி வரும் இந்த வட பாவ் டீயுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற ஒன்று. அதுவும் இதனுடன் சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவை அள்ளும். இந்த வட பாவை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.

தேவையானப் பொருட்கள்:

 • 4 பெரிய உருளைக்கிழங்கைப் பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.

 • 1 தேக்கரண்டி எண்ணெய்

 • 1 தேக்கரண்டி கடுகு

 • 1 தேக்கரண்டி சீரகம்

 • ½ கப் நறுக்கிய வெங்காயம்

 • ¼ கப் கருவேப்பிலை

 • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

 • 2 அல்லது 3 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

 • ½ தேக்கரண்டி மஞ்சை தூள்

 • உப்பு

 • நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

 • 1 கப் அளவு கடலை மாவு

 • பேக்கிங் சோடா

 • தண்ணீர் போதுமான அளவு

 • உப்பு

 • பாவ் ( ரொட்டி ரோல்ஸ்)

 • பச்சை மிளகாய் சாஸ்

 • பூண்டு சட்னி

 • வெண்ணெய்

செய்முறை:

1. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து 2-3 நிமிடங்கள் சமைக்கவும். அதன்பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி குளிரவைக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பேக்கிங் சோடா (தேவைப்பட்டால்) மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டிகள் வராமல் மென்மையாக கலக்க வேண்டும்.

3. உருளைக்கிழங்கை வட்டமாக வடை போல் தட்டி வைத்துக்கொள்ளவும். இப்போது அதனைக் கடலை மாவில் முழுவதுமாக பிரட்டி எடுக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அந்த வடையை மிதமான சூட்டில் வறுக்கவும். பொன்னிறமாகும் வரை மிருதுவாக வறுக்கவும்.

இதையும் படியுங்கள்:
கமகமக்கும் முருங்கைப்பூ பிரியாணி!
Vada Pav recipe in tamil

4.  பாவை ( ரொட்டி) கிடைமட்டமாக வெட்டி, ஒரு ரொட்டியில் பச்சை மிளகாய் சாஸ் இன்னொரு ரொட்டியில் பூண்டு சட்னி அல்லது தக்காளி சாஸ் தடவவும். இதற்கிடையில் சூடான வடையை வைத்து அழுத்தவும். அதன்மீது உலர் பூண்டு பொடியை தேவையென்றால் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது இந்த வட பாவை சட்னியுடன் சேர்த்து மாலை நேரத்தில் தேநீருடன் சேர்த்து சாப்பிட்டால், சொர்க்கமே நம் கையில்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com