நம்ம ஊர் வட பாவ் முதல் ஆலூ டிக்கி வரை: சர்வதேச அங்கீகாரம்!

Vada Pav to Aloo Tikki
Vada Pav to Aloo Tikki
Updated on

ருடந்தோறும், டேஸ்ட் அட்லஸ் என்னும் ட்ராவெல் ஆன்லைன் கெய்டு (Travel Online Guide), வெவ்வேறு விதவிதமான உணவு வகைகளை பட்டியலிட்டு வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், உருளைக்கிழங்கை முக்கிய கூட்டுப்பொருளாக வைத்து தயாரிக்கப்படும் ஐம்பது வகையான உணவுகள் உள்ளன.

அவற்றுள் இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுகள் எவை எவை, அவை பெற்றுள்ள வரிசை எண் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் முறை எப்படி போன்ற விவரங்களையும் சுருக்கமாக சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.

மும்பையில் பிரபலமான வட பாவ் (Rank17): மும்பையில் பிரசித்தி பெற்ற தெருக்கடை உணவு இது. வேகவைத்த உருளைக்கிழங்கை நசுக்கி அதனுடன் ஸ்பைஸஸ் சேர்த்து வடைகளாகத் (Vada) தட்டி எண்ணையில் மொறு மொறுவென பொரித்து, அதை, சூடான நெய்யில் லேசாக பிரட்டி எடுத்த இரண்டு மிருதுவான பிரட் (Pav) தூண்டுகளின் இடையில் வைப்பர். வடை மீது உலர்ந்த பூண்டு சட்னி மற்றும் பச்சை மிளகாய் வைத்து உண்ணக்கொடுப்பர். மலிவான விலையில் விரைவாக வழங்கப்படும் இந்த உணவை மும்பையில் வேலைக்கு செல்லும் மக்கள் பல வருடங்களாக வாங்கி உட்கொண்டு வருகின்றனர்.

ஆலூ கோபி (Rank 29): உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவருடன் இஞ்சி, சீரகம், மஞ்சள் தூள் மற்றும் மீடியமான அளவில் ஸ்பைஸஸ் சேர்த்து தயாரிக்கப்படும் சப்ஜி இது. ரொட்டி மற்றும் பரோட்டாவுடன் சேர்த்து உண்பதற்கு ஏற்றது. கிரேவி தன்மையின்றி, உலர் பதத்தில் டெக்சரும் சுவையும் சிறிதும் குறையாத சூப்பர் சைட் டிஷ் இந்த ஆலூ கோபி.

இதையும் படியுங்கள்:
மரவள்ளிக்கிழங்கில் அசத்தலான 2 ரெசிபிகள்: இட்லி & சிப்ஸ்!
Vada Pav to Aloo Tikki

படாட்டா வடா (Rank 40): வேகவைத்து நசுக்கிய உருளைக் கிழங்குடன் கடுகு, பச்சை மிளகாய் கறிவேப்பிலை தாளித்து சேர்த்து உருண்டைகளாக்கி, கடலை மாவு கரைசலில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுப்பது இந்த படாட்டா வடா. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னி தொட்டும் சாப்பிடலாம். இதுவும் மலிவான விலையில் வாங்கக் கூடிய தெருக்கடை உணவுகளில் ஒன்று.

ஆலூ டிக்கி (Rank 44): வேகவைத்து நசுக்கிய உருளைக்கிழங்குடன் ஸ்பைஸஸ் சேர்த்து பட்டிகளாகத் தட்டி கொஞ்சமா எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் புரட்டிப்போட்டு சுட்டெடுப்பது ஆலூ டிக்கி. வெளிப்புறம் மொறு மொறுப்புடனும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும். இதைப் பிற சாட் உணவுகளுடன் கலந்து அல்லது தனியாக என எப்படி வேண்டுமானாலும் உண்ணலாம். சட்னி அல்லது தயிர் தொட்டும் இந்த ஆலூ டிக்கியை உட்கொள்ளலாம்.

இந்த உணவுகள் அனைத்துமே இந்தியாவின் வட மாநிலங்களில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com