கல்தோசைக்கு சூப்பர் காம்பினேஷன் வடகறி!

வடகறி ரெசிபி...
வடகறி ரெசிபி...

ணவகங்களுக்கு செல்வோரில் பலர் வடகறி செட்தோசை இருக்கா என்று கேட்பதைப் பார்க்கலாம். அப்படி என்ன இருக்கு அந்த வடகறியில்? நாவை சுண்டி இழுக்கும் ருசியுடன் வயிறும் நிறைந்து விடுகிறதே? பசித்த வயிறு ருசிக்க ஏற்ற  வடகறி செய்முறையை நாமும் இங்கு பார்ப்போம்.

நாம் வழக்கமாக செய்யும் உணவுகளிடையே வடகறிக்கு என்றும் தனி இடமுண்டு. செய்ய சற்று நேரம் பிடித்தாலும் சுவைக்க சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
டலை பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - (நறுக்கியது) 1 கப்
தக்காளி - (நறுக்கியது) 4
தேங்காய் - (துருவியது) 1/2 மூடி
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி  - சிறு துண்டு
வரமிளகாய் & ப. மிளகாய்- 6
மஞ்சள் தூள் -சிறிது
சோம்பு - 1 டே. ஸ்பூன்
பட்டை கிராம்பு - தலா 2
பிரிஞ்சி இலை - 1
கொத்தமல்லித் தூள் - 2 டே ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை கொத்துமல்லி - சிறிது

செய்முறை:
முதலில் கடலை பருப்பை எடுத்துக் கல் போக சுத்தம் செய்து கழுவி  சுமார் 2 மணி நேரம் ஊற வைத்த பின் தண்ணீரை முற்றிலுமாக வடித்து அதனுடன் ஒரு துண்டு இஞ்சி, சோம்பு, காய்ந்த மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நைசாக அரைக்காமல் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். (தேவைப்பட்டால் மட்டும்  சிறிது தண்ணீர் தெளிக்கலாம்)
அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உருண்டைகளை வடைகளாகத் தட்டி ஒவ்வொன்றாக போடவும். மிதமான தீயில் திருப்பி விட்டு பொன்னிறம் ஆகும் வரை அதை வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் அவற்றை உதிர்த்து கொள்ளவும்.

பின் துருவிய தேங்காய் மற்றும் முந்திரியை போட்டு நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் ஒரு  கடாய் அல்லது ஃபானை அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு தாளித்து ஒரு துண்டு பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சிறிது சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

 தோசை வடகறி
தோசை வடகறி

பின் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு பச்சை வாசம் போகும் வரை  நன்கு வதக்கவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதையும் நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின் அதில் மஞ்சள் தூள், தனியா தூள்,  தேவையான அளவு உப்பு, மற்றும் (அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்க்கலாம்)அதை நன்கு கிளறி விட்டு சிறிது நேரம் வேக விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வரை கொதிக்க விடவும். அதில் நாம் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் முந்திரி பேஸ்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

இதையும் படியுங்கள்:
களைப்பு மற்றும் சோர்வைப் போக்கும் உணவுகள்!
வடகறி ரெசிபி...

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் செய்து வைத்திருக்கும் தூளாக்கிய வடைகளைப் போட்டு மசாலாவுடன் நன்கு கலந்து வருமாறு கிளறி விட்டு மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து  வேகவிடவும். நன்கு வாசம் வந்ததும் எடுத்துக் கிளறி கொத்தமல்லியை தூவிப் பரிமாறலாம்.

கல்தோசை எனப்படும் மொத்தமான தோசைக்கு சுடசுட இந்த வடகறி செம டேஸ்டாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com