
அவல் வெஜிடபிள் வடகம்
தேவை:
கெட்டி அவல் – 3 கப்,
நீர் பூசணிக்காய் துண்டுகள் – அரை கப்,
கேரட் துருவல் – கால் கப்.
நறுக்கிய கொத்தவரங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
அவலை களைந்து, நீரை வடித்து வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு இரண்டையும் அரைத்து, அவலுடன் கலக்கவும். காய்கறிகளையும் சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, வடை போல் தட்டி, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து, வெயிலில் காய விடவும். ஒருபுறம் காய்ந்ததும் திருப்பி வைத்து, மறுபுறமும் வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். சாம்பார், குழம்பு அனைத்திற்கும் இந்த வடகத்தை பொரித்து தொட்டுக்கொள்ளலாம்.
அவல் முறுக்கு வடகம்
தேவை:
கெட்டி அவல் - 2 கப்
எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
அவளை களைந்து, நீரை வடித்து, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, எலுமிச்சை சாறு, சீரகம் கலந்து வாழையிலையில் முள்ளு முறுக்கு அச்சில் அவல் கலவையை நிரப்பி, பிழிந்து, வெயிலில் காய விடவும். இருபுறமும் காய்ந்ததும் எடுத்து வைக்கவும்.
அவல் கூழ் வடகம்
தேவை:
கெட்டி அவல் - 2 கப்
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சம் பழச்சாறு -2 ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - தேவைக்கு
பெருங்காயத்தூள், - 1 சிட்டிகை
செய்முறை:
அவலைக் களைந்து, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இதனுடன் எலுமிச்சைசாறு, சிறிது நீர் சேர்த்து, கூழ் பதத்திற்கு கரைக்கவும். வாழை இலையில் எண்ணெய் தடவி அவல் கூழை ஒரு கரண்டியால் மொண்டு மொண்டு எடுத்து ஊற்றி, இரு புறமும் வெயிலில் காயவைத்து எடுக்கவும். இது அவல் அப்பளம் போல இருக்கும்.
அவல் குழம்பு வடகம்
தேவை:
கெட்டி அவல் - 2 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
வர மிளகாய் - 3
கடலைப்பருப்பு, துவரம் பருப்பு - தலா 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
செய்முறை:
கடலை பருப்பு துவரம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து அரைக்கவும். அவலைக் களைந்து, நீரை வடித்து, வர மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து பருப்பு கலவையுடன் கலந்து, பெருங்காயத்தூள் சேர்த்து பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல் தட்டி, எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து, வெயிலில் வைக்கவும். ஒருபுறம் காய்ந்ததும் எடுத்து திருப்பி வைத்து, மறுபுறமும் காய்ந்ததும் எடுத்து வைக்கவும். இது சாம்பார், குழம்பு போன்றவற்றில் பொரித்துப்போட சுவையாக இருக்கும்.