
கீரை என்றாலே பல நன்மைகளை தரும் என்பது நாம் அறிந்ததே. சில வகையில் கீரைகளை சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பருப்பு கீரையுடன் பூண்டு சேர்த்து வேகவிட்டு கடைந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கொழுப்பு குறைய ஆரம்பிக்கும்.
புளிச்சக் கீரையுடன் பார்லி சேர்த்து கஞ்சி காய்ச்சி குடிக்க கால் வீக்கம் குணமாகும்.
தூதுவளை கீரையை காய வைத்து பொடியாக்கி தினமும் சாப்பிடுவதால் காது தொடர்பான உடல் உபாதைகளுக்கு நோ சொல்லி விடலாம்.
கரிசலாங்கண்ணி கீரையை மிளகு சேர்த்து வேகவிட்டு சாப்பிட வர ரத்த சோகை நீங்கும்.
உலர்ந்த புதினா இலையை பயன்படுத்தி டீ வைத்து சாப்பிட வீக்கம், வயிற்று வலி போன்றவை குணமாகும்.
பருப்பு கீரையை அரைத்து தீப்புண்கள் மீது தடவினால் காயம் விரைவில் ஆறும்.
பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட தீராத தாகம் தீரும்.
முருங்கைக் கீரையை சூப்பாக வைத்து சாப்பிட்டு வர இரத்த விருத்தி அதிகரிப்பதோடு, தாதுப் விருத்தியாகும்.
மணத்தக்காளி கீரையை பூண்டு நான்கு பல் சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட்டு சாப்பிட இதய நோய் குணமாகும்.
வெந்தயக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து உண்ணும்போது உடல் குளிர்ச்சியாவதுடன் முடி வளர்ச்சிக்கும் உதவும்.
வல்லாரை கீரை பொதுவாக இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது. வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வல்லாரை இலையை உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துபோகும்.
சிறுநீரகக் கோளாறுகள் நீங்க அனைத்து வித கீரைகள் கடைந்து சாப்பிடலாம்.