
சூழலுக்கு ஏற்றபடி எப்படி பேச வேண்டும் என விதிகள் இருப்பது போலவே, சில சமயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இதைப் புரிந்து கொள்ளாமல் விவாதங்கள் செய்வதால் தான் வீட்டிலும், உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் கூட்டத்திலும், சமூகத்திலும் பல பிரச்னைகள் உருவாகின்றன.
எப்போதெல்லாம் பேச்சை தவிர்த்து நாம் அமைதியாக இருக்க வேண்டும்? இதோ இந்த மாதிரியான சமயங்களில்தான்… இதை கடைபிடியுங்கள் போதும்.
1. கோபத்தின் உச்சத்தில் இருக்கும் போது, அவசரப்பட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
2. ஒரு விஷயத்தைப் பற்றி முழு தகவல்கள் உங்களுக்குத் தெரியாதபோது, அதைப்பற்றி பேசாமல் அமைதியாக இருந்து விடுங்கள்.
3. யாரோ சொல்லும் ஒரு விஷயத்தை உங்களால் உறுதி செய்ய முடியாதபோது அதைப் பற்றி எதுவும் சொல்லாமல் அமைதி காத்திடுங்கள்.
4. அடுத்தவர் சொல்வதைக் கேட்க வேண்டியிருக்கும் சூழலில் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுங்கள்
5. அடுத்தவர்களின் விமர்சனங்கள் உங்கள் மனதைப் பாதிக்கும்போது எதுவும் சொல்லாமல் அமைதி காத்திடுங்கள்.
6. புனிதமாக மற்றவர்கள் கருதும் விஷயங்கள் பற்றிக் கேலியாகப் பேசத் தோன்றும்போது வாயைத் திறக்காமல் அமைதியாக இருங்கள்.
7. உங்கள் வார்த்தைகள் உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் என்றால் அமைதியாக இருந்து விடுங்கள்.
8. பாவச் செயல்களைப் பற்றிக் கிண்டலாக எதுவும் சொல்லத் தோன்றும்போது வாயைத் திறக்காமல் அமைதியாக இருங்கள்.
9. நீங்கள் சொல்லும் வார்த்தை பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்று தோன்றினால் அமைதியாக இருங்கள்.
10. உங்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவதைவிட, பேசாமல் இருப்பது நல்லது.
இவற்றை எல்லாம் யோசித்து புரிந்து பார்த்து பேசுங்கள். பிரச்னைகளே உருவாகாது.