
பார்லி தோசை
தேவை:
பார்லி - 1 கப்
இட்லி அரிசி - 1 கப்
ரவை, வெந்தயம், துவரம் பருப்பு - தலா 3 டேபிள்ஸ்பூன்
மோர் - 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பார்லியை தனியாகவும், மற்ற பொருட்களை தனியாகவும் ஊறவைத்து, ஊறியதும் நீரை வடித்து விட்டு, எல்லாவற்றையும் கலந்து, உப்பு சேர்த்து அரைக்கவும். 5 மணி நேரம் கழித்து, மோர் கலந்து, தோசைக்கல்லில் மாவை தோசைகளாக வார்க்கவும். சுவையான பார்லி தோசை தயார்.
தேங்காய் தோசை
தேவை:
புழுங்கல் அரிசி - 2 கப்
மிளகு சீரகத்தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
புழுங்கல் அரிசியை இரண்டு மணிநேரம் நீரில் ஊறவைத்து, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அரைக்கவும். இரண்டு மணிநேரம் கழித்து, மாவில் மிளகு, சீரகத்தூள் கலந்து, தோசைக்கல்லில் மாவை ஊற்றி தோசைகளாக வார்க்கவும்.
கடலை மாவு தோசை
தேவை:
கடலை மாவு - 2 கப்
மிளகு, சீரகத்தூள் - 1 ஸ்பூன்
பச்சரிசி மாவு - அரை கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கடலைமாவை நீர் விட்டு, பச்சரிசி மாவு கலந்து, தோசை மாவு பதத்தில் கரைத்து, அதில் உப்பு,, பெருங்காயத்தூள், பொடியாய் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து, தோசை கல்லில் எண்ணெய் விட்டு தோசைகளாக வார்க்கவும். தோசை வெந்ததும், அதன் மேல் மிளகு சீரகத்தூளை பரவலாக தூவவும். இந்த தோசையை செய்வது மிகவும் சுலபம்.
ஜவ்வரிசி தோசை
தேவை:
ஜவ்வரிசி - 2 கப்
பச்சரிசி -1 கப்
தயிர் - அரை கப்
புளித்த மோர் - 2 கப்
தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு , சீரகம் நறுக்கிய பச்சை மிளகாய் 2
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
ஜவ்வரிசி, பச்சரிசி இரண்டையும் இரண்டு மணிநேரம் நீரில் ஊறவைத்து, நைசாக அரைக்கவும். அதில் உப்பு, தயிரைக் கலந்து மூடிவைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு, கடுகு, சீரகம் தாளித்து, பச்சை மிளகாயை வதக்கி மாவில் சேர்த்து, பெருங்காயத்தூள், புளித்த மோர் கலக்கவும். பிறகு தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு, மாவுகளை தோசைகளாக வார்க்கவும்.