
முலாம்பழ ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்:
ராகி – ¼ கிலோ, பச்சை வேர்க்கடலை – ¼ கிலோ, ஏலக்காய் – 5, பால் - 3 தம்ளர், சர்க்கரை (பொடித்தது) - 1 தம்ளர்.
செய்முறை:
ராகியைக் கல்நீக்கிச் சுத்தம் செய்து ஒருநாள் முழுவதும் நீரில் வைத்திருந்து விட்டு, மறுநாள் அதை மிக்ஸியில் போட்டு நீர் விட்டு நன்றாக அரைக்கவும். இதனைச் சுத்தமான துணியில் வடிகட்டி கெட்டியான பால் மூன்று தம்ளர் இருக்கும்படி அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பாலைக் கனமான பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் நிதானமான சூட்டில் வைத்து ராகி பால் சற்று கெட்டியாகிக் கூழாகும்வரை கிண்டி கீழே இறக்கி நன்கு ஆற வைக்கவும்.
மற்றொரு பாலையும் நன்கு சுண்டக் காய்ச்சி வைத்துகொள்ளவும்.
வேர்க்கடலையை நன்கு நீரில் ஊற வைத்துப் பின் மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
கடைசியில் ராகி கூழ், பால், வேர்க்கடலை விழுது மூன்றையும் ஒன்றாகக் கலந்து அத்துடன் ஏலக்காயை நன்கு பொடி செய்து தூவி, சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும் (கலர் எஸன்ஸ் விருப்பமானால் சேர்த்துக்கொள்ளலாம்.) பின்னர் இதை மீண்டும் மிக்ஸியில் இரண்டு நிமிடங்கள் ஓடவிட்டு, குட்டையான, பரந்த கப் அல்லது கிண்ணங்களில் ஊற்றி, ஃப்ரிட்ஜ் ஃப்ரீஸரில் வைக்கவும்.
இரண்டு அல்லது இரண்டரை மணி நேரங்கள் கழித்து ஐஸ்கிரீமை வெளியில் எடுத்துப் பார்த்தால், ஸ்பூனால் வெட்டிச் சாப்பிடும் பக்குவத்தில் மிகவும் சுவையாக இருக்கும்.
- உமா நாராயணசுவாமி. சென்னை
ஏலக்காய் ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்:
முலாம்பழம் - ஒன்று (சுமாரான அளவு), பால் - 1½ லிட்டர், சர்க்கரை - 1 கப், கஸ்டர்டு பௌடர் - 1% கரண்டி, வெண்ணெய் கப் வனிலா எஸன்ஸ் - 3 (அ) 4 சொட்டு.
செய்முறை:
முதலில் கஸ்டர்டு பவுடரையும், சர்க்கரையையும் இரண்டு கப் பச்சைப் பாலில் நன்றாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்., மீதி பாலை நன்றாக(தண்ணீர் விடாமல்) காய்ச்சவும். பால் நன்றாகக் காய்ந்தபிறகு அதில் கஸ்டர்டு பவுடர், சர்க்கரை மிக்ஸரைச் சேர்த்து மேலும் நன்றாகக் கொதிக்க விடவும். கீழே இறக்கி அதில் வெண்ணெயைச் சேர்க்கவும். நன்றாக ஆறிய பிறகு ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
முலாம் பழத்தை நன்றாகத் தோல் சீவி, உள் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்த ஐஸ்கிரீம் கொஞ்சம் செட் ஆனபிறகு அதை வெளியில் எடுத்து அதில் முலாம் பழத் துண்டங்களைப் போட்டு மிக்ஸியில் 3 - 4 நிமிடம் நன்றாக அடிக்கவும். மீண்டும் ஐஸ் ட்ரேயில் ஊற்றுவதற்கு முன்பு அதில் 3 - சொட்டு வெனிலா எஸன்ஸை ஊற்றி ஒரு கரண்டியில் கலக்கி- பிறகு ட்ரேயில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
நன்றாக செட் ஆனபிறகு வெளியில் எடுத்து பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு. காய்ந்த திராட்சையால் அலங்காரம் செய்து பரிமாறவும். இதன் ருசி மிகவும் புதுமையாகவும், சுவையாகவும் இருக்கும்.
- கலா ஹரிஹரன்