மனம் பூரிப்பு தரும் நான்கு வகை பூரிகள்!

Four types of puris...
variety poori recipes
Published on

இனிப்பு பூரி

தேவை: 

பேரிச்சம்பழம் – 200 கிராம், 

சோள மாவு –  2 கப்,

 பால் – அரை கப்

உப்பு - ஒரு சிட்டிகை. 

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 

பேரிச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.  பாலைக் காய்ச்சி வைத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் பேரிச்சம்பழம் விழுது, உப்பு கலந்து பாலைத் தெளித்து, பிசைந்து பூரிகளாக இட்டு, வாணலியில் காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த பூரி இனிப்பு சுவையுடன், வித்தியாசமாக இருக்கும்.

காரப் பூரி

தேவை:

கோதுமை மாவு - 2 கப், 

இஞ்சி துருவல் - 1 ஸ்பூன், 

பச்சை மிளகாய் - 2, 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: 

பச்சை மிளகாய், இஞ்சி துருவல் இரண்டையும் அரைத்து, சாறு எடுத்து வடிகட்டவும். கோதுமை மாவில் உப்பு, இஞ்சி, மிளகாய் சாறு கலந்து, தேவைக்கேற்ப நீர் தெளித்து பிசையவும். அதை பூரிகளாக இட்டு, வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். உப்பும், காரமுமாக இருக்கும் இந்த பூரிக்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும்.

பாலக் பூரி

தேவை:

கோதுமை மாவு - 2 கப்,

பாலக் கீரை நறுக்கியது - 2 கப்,

மிளகு சீரகத்தூள் - ஒரு ஸ்பூன் 

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,

செய்முறை:

பாலக்கீரையை மிக்ஸியில் அரைத்து, சாறு எடுத்து, வடிகட்டி, உப்பு, மிளகு சீரகத்தூள் சேர்க்கவும். கோதுமை மாவில் அந்த சாறை விட்டு, நன்கு பிசையவும். பின்னர் அந்த மாவை பூரிகளாக இட்டு,  வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். கீரையின் சத்தும் கிடைக்கும். பச்சை நிறத்தில் பூரி அழகாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கோவைக்குப் போனா இந்த 5 உணவுகளை மிஸ் பண்ணிடாதீங்க...
Four types of puris...

பீட்ரூட் பூரி

தேவை: 

கோதுமை மாவு – 2 கப், 

பீட்ரூட்– 2, 

மிளகு சீரகத்தூள் – அரை ஸ்பூன், 

 எண்ணெய் – தேவைக்கேற்ப, 

உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:  

பீட்ரூட்டை கழுவி, தோல் நீக்கி, நறுக்கி, அரைத்து சாறு எடுத்து வடிகட்டவும். கோதுமை மாவில் பீட்ரூட் சாறு, உப்பு, மிளகு சீரகத்தூள் கலந்து நன்கு பிசையவும். பின்னர் இந்த மாவை பூரிகளாக இட்டு, வானலியில் காய்ந்த எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும். பீட்ரூட்டின் சத்தும் கிடைக்கும். பூரியின் நிறமும் அழகாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com