

ஸ்ப்ரவுட்ஸ் சாலட்
தேவையான பொருட்கள்:
முளைகட்டிய பச்சை பயறு -1கப், வேகவைத்து தோலுரித்து கட் பண்ணிய சர்க்கரை வள்ளி கிழங்கு _1, வேகவைத்த வேர்க்கடலை -1/2 கப், கேரட்-1துருவியது, மாங்காய் -1/4கப், பொடியாக நறுக்கியது, நறுக்கிய வெங்காயம் -1/4கப், ப மிளகாய், இஞ்சி-சின்ன துண்டு, சில்லி ஃப்ளேக்ஸ்-1டீஸ்பூன், எலுமிச்சை சாறு -1டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை-2 டேபிள் ஸ்பூன், உப்பு -தேவைக்கு
செய்முறை:
முளைபயறை ஆவியில் நிறம் மாறாமல் வேகவிட்டு ஆறவிடவும். ஆறியதும் அதனுடன் உப்பு, மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும். பீட்ரூட் துருவல் தூவி பரிமாறவும்.
வெள்ளரி வெஜிடபிள் சாலட்
தேவையானவை:
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் -2கப், கேரட்-3/4கப், கலர் குடைமிளகாய் -1/4கப் (நறுக்கியது)., நறுக்கிய வெங்காயம் -1/2கப், கெட்டித் தயிர்-1கப், கொத்தமல்லி தழை-பொடியாக நறுக்கியது-1டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் -தேவைக்கு
செய்முறை;
ஒரு பவுலில் நறுக்கிய வெள்ளரி, காய்கறிகள் குடைமிளகாய், கேரட், வெங்காயம், தயிர், தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
பப்பாளிக்காய் சாலட்
தேவையான பொருட்கள்:
பப்பாளிக்காய்-1, கேரட், வெங்காயம், தலா-1, சோயா சாஸ்,-1டேபிள் ஸ்பூன், நறுக்கிய பூண்டு பல்-2, மிளகுத்தூள் -1/2டேபிள் ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை பொடி-2டேபிள் ஸ்பூன்,சில்லி ஃப்ளேக்ஸ்-1டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில்-2டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை:
பப்பாளிப் காயை தோல் சீவி கேரட், வெங்காயம் ஆகியவற்றை நீள நீளமாக சீவிக்கொள்ளவும். இதை பவுலில் போட்டுக் கொள்ளவும். ஒரு பாட்டிலில் வேர்க்கடலை பொடி, ஆலிவ் ஆயில்,சோயா சாஸ், பூண்டு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றை போட்டு மூடிவிட்டு நன்கு குலுக்கி கலக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங். இதை பவுலிங் உள்ள காய்கறியோடு சேர்த்து கலந்து கொள்ளவும். இதன் மேல் வறுத்த எள்ளை தூவி பரிமாறவும்.
ப்ரூட் சாலட்
தேவையானவை:
விருப்பமான பழங்கள்-2கப், எசென்ஸ்-சில துளிகள், எலுமிச்சை சாறு 1/2டீஸ்பூன், சர்க்கரை பொடி-2டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
நறுக்கிய பழங்களை பவுலில் போட்டு அதனுடன் சர்க்கரை பொடி, எசென்ஸ், எ சாறு சில துளிகள் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் ஐஸ்கீரீம் வைத்து சில்லென்று பரிமாறவும்.