
கானா வாழைக் கீரை பொரியல்
கானா வாழைக்கீரை மற்றும் முருங்கைக் கீரைகளை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றலை கிள்ளி சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து இரண்டு வதக்கு வதக்கி கானா வாழைக்கீரை மற்றும் முருங்கைக் கீரையை சேர்க்கவும். தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கை தண்ணீர் தெளித்து வதக்கி தட்டை போட்டு மூடி 2 நிமிடம் வேக விடவும். பிறகு தேங்காய் துருவல் தூவி, ஒன்றிரண்டாக பொடித்த வேர்க்கடலையைத் தூவி இறக்க மிகவும் ருசியான கானா வாழைக்கீரை பொரியல் தயார்.
வெயிலுக்கு ஏற்ற கீரை மோர்:
முளைக்கீரை 1 கைப்பிடி
அரைக்கீரை 1 கைப்பிடி
கெட்டி மோர் 1 கப்
உப்பு தேவையானது
மிளகு தூள் 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
முளைக்கீரை, அரைக்கீரை இரண்டையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். நன்கு ஆறியதும் கீரையுடன் உப்பு, சிறிது மோர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் கெட்டி மோர் ஒரு கப், சிறிது தண்ணீர், பெருங்காயத்தூள் கலந்து டம்ளர்களில் ஊற்றி மேலாக பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தூவி பருக உடலை குளிர்விக்கும் வெயிலுக்கு ஏற்ற பானமாக இருக்கும்.
நீர் சத்து மிகுந்த வெள்ளரி, வெண்பூசணி ஜுஸ்:
வெள்ளரிக்காய் பாதி
வெண்பூசணி 10 சிறு துண்டுகள்
உப்பு தேவையானது
பச்சை மிளகாய் 1
கொத்தமல்லி சிறிது
மோர் ஒரு கப்
வெள்ளரிக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். வெண்பூசணியை தோல், விதைகள் நீக்கி தூண்டுகளாக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் வெள்ளரிக்காய், வெண்பூசணி துண்டுகளுடன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதனை வடிகட்டி மோர் கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பருக வெயிலுக்கு ஏற்ற இதம் தரும் பானம் தயார்.