வேகன் என்றால் விலங்குகளிடமிருந்து வரும் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாத ஒரு உணவு முறையாகும். முட்டை, பால், தேன் போன்ற விலங்கு சார்ந்த உணவுகளை தவிர்த்து தாவர அடிப்படையிலான உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் ஒரு வாழ்க்கை முறையாகும். வேகன் பாஸ்தா என்பது பாஸ்தாவை சைவ முறையில் தயாரிப்பதாகும். இது சைவ உணவு பொருட்களை பயன்படுத்தி செய்யப்படுகின்றன.
பாஸ்தா 2 கப்
குடமிளகாய் பாதி
சிகப்பு மிளகாய் சாஸ் 1 ஸ்பூன் தக்காளி கெட்ச்அப் 2 ஸ்பூன்
ஷெஸ்வான் சாஸ் 2 ஸ்பூன்
பாஸ்தா மசாலா 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணெய் சிறிது
முதலில் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் பாஸ்தாவை போட்டு தேவையான உப்பும் சேர்த்து நன்கு வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு தட்டில் பரத்தி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் குடைமிளகாய்த் துண்டுகளை சேர்த்து கிளறி, வேகவைத்த பாஸ்தாவை போட்டுக் கிளறவும். பிறகு சிகப்பு மிளகாய் சாஸ், ஷெஸ்வான் சாஸ், பாஸ்தா மசாலா சேர்த்து கிளறி இறக்கி தக்காளி கெட்ச்அப் போட்டு கலந்து பரிமாற மிகவும் ருசியான பாஸ்தா தயார். விருப்பப்பட்டால் சிறிது சீஸைத் துருவி மேலாக போட்டு அலங்கரிக்கலாம்.
பாஸ்தா 2 கப்
கேரட் நறுக்கியது 1/2 கப்
இனிப்பு சோளம் 1/4 கப்
குடைமிளகாய் பாதி
நறுக்கிய பூண்டு 2 ஸ்பூன்
மிளகுத் தூள் 1 ஸ்பூன்
மிளகாய் சாஸ் 1 ஸ்பூன்
தக்காளி விழுது 2 ஸ்பூன்
சர்க்கரை 1/2 ஸ்பூன்
எண்ணெய் சிறிது
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் பாஸ்தாக்களை போட்டு தேவையான உப்பு, சிறிது எண்ணெய் விட்டு வேக விடவும். நன்கு வெந்ததும் வடிகட்டி தட்டில் தனியாக பரத்தி வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், இனிப்புச் சோளம், குடைமிளகாய், தக்காளி விழுது, சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு அதில் வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து மிளகாய் சாஸ், மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையைக் கூட்ட அரை ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வெஜிடபிள்ஸ் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்கள்.
பாஸ்தா 2 கப்
வெங்காயம் 1
பூண்டு நறுக்கியது 4 ஸ்பூன்
ப்ராக்கோலி 1கப்
எலுமிச்சை சாறு சுவைக்காக
உப்பு தேவையானது
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
வெண்ணெய் 1 ஸ்பூன்
சாஸ் தயாரிக்க:
மைதா 2 ஸ்பூன், காய் வெந்த தண்ணீர் ஒரு கப், வெண்ணெய் சிறிது
வெறும் வாணலியில் வெண்ணெய் சேர்த்து மைதா மாவை போட்டு லேசாக வறுத்து அதில் காய்கறி வெந்த தண்ணீர்(ப்ராக்கோலி வெந்த தண்ணீர்) சேர்த்து திக்கான சாஸாக தயாரிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு உப்பு, எண்ணெய் சிறிது சேர்த்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் பாஸ்தாவை போட்டு நன்கு வேக விடவும். வெந்த பாஸ்தாவை தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி அத்துடன் ப்ராக்கோலி துண்டுகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் சமைக்கவும். இதில் காய்கறி வெந்த தண்ணீரை அல்லது பாஸ்தா வேக வைத்த தண்ணீரைக் கூட சேர்க்கலாம். பாஸ்தாவை சேர்த்து ருசிக்கு உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாற மிகவும் ருசியான கிரீமி பாஸ்தா சூப் தயார்.
கிரீமியாகவும் ருசியாகவும் இருக்கும் இந்த பாஸ்தா. செய்துதான் பாருங்களேன்!