நவராத்திரிக்கு மட்டுமல்ல எப்போதுமே சத்தான சுண்டல் செய்து அசத்தலாம்…!

 Variety sundal recipes
healthy sundal recipes
Published on

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை மாலை ஸ்நாக்ஸாக ஆரோக்கியம் நிறைந்த பல வகையான சுண்டல் வகைகைளை செய்து கொடுக்கலாம். சுண்டல் செய்ய வெரைட்டியான டிப்ஸ்கள்.

எந்த வகை சுண்டலாக இருந்தாலும் குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் ஊறவிட்டு பிறகு வேகவைக்க வேண்டும்.

சுண்டல் தாளிக்க நல்லெண்ணைதான் பெஸ்ட். பெருங்காயம், சுக்கு பொடி, மிளகு பொடி சேர்த்து தாளித்தால் வாயுதொல்லை வராது.

சுண்டலை வேகவைக்கும்போது சிறிது இஞ்சியை தட்டி போட்டால் வயிற்றுக்கு பிரச்னை வராது.

சுண்டலுடன் சாட் மசாலா, 2ஸ்பூன் தக்காளி சட்னி சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

பச்சைப் பட்டாணி சுண்டல், சென்னா சுண்டல் எது செய்தாலும் அதனுடன் சிறிதாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்தால் கலராக சவையாக இருக்கும்.

சுண்டலுடன் மேலே தூவ ஆம் சூர் பவுடர், கசூரி மேத்தி போன்றவற்றை கலந்து சேர்த்தால் சுண்டல் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

சுண்டல் தயாரானவுடன் காரப்பொடி இல்லையெனில் புளியோதரைப் பொடியைத் தூவி தாளித்தும் இறக்கினால் காரசாரமாக சுண்டல் இருக்கும்.

எந்த ஒரு சுண்டலுக்கும் கடைசியில் வெள்ளை எள்ளையும், கறிவேப்பிலையையும் வறுத்து பொடித்து தூவினால் சுவையாக இருக்கும்.

பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு சுண்டலில் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து மேலே தூவி கொடுத்தால் சுவையாக இருக்கும்.

நவதானியங்களில் சுண்டல் செய்து கொடுத்தால் சத்து நிறைந்தும் சுவையாகவும் இருக்கும். உளுந்து, காராமணி, வேர்க்கடலை சுண்டல்கள் சத்தானது.

புதினா கொத்தமல்லி பச்சை மிளகாய் இஞ்சி பொடியாத நறுக்கி வதக்கி சுண்டலை இறக்கும்போது தூவி சாப்பிட்டால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பிரபல இனிப்பு வகையான சோமாஸ் (Sweet Somas) மற்றும் தேன் மிட்டாய் செய்வது எப்படி?
 Variety sundal recipes

தேங்காய் பூவை வறுத்து சேர்த்தால் சுண்டல் மாலை வரை கெடாமல் இருக்கும் அவலை வறுத்து பொடித்தும் தூவினால் ருசியாக இருக்கும்.

மாங்காய் துருவல், கேரட் துருவல், தேங்காய் துண்டுகள் போட்டு சுண்டல் தாளித்தால்சுண்டல் கலர்ஃபுல்லாகவும் ருசியாகவும் வித்தியாச சுவையுடன் இருக்கும்.

சுண்டலுக்கு பட்டாணி வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு டீஸ்பூன் சர்க்கரை போட்டு வேகவைத்தால் கலராகவும் சுவையாகவும், மணத்துடன் தூக்கலாக இருக்கும்.

பாசிப்பருப்பு சுண்டல் குழையாமல் வர வேண்டுமா? பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடித்து கொதிக்க நீரில் போட்டு மூடி வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து நீரை வடித்து விட்டு தாளித்தால் குழையாமல் முத்து முத்தாக இருக்கும்.

கொண்டைக்கடலையை ஊறபோட மறந்துவிட்டாள் வெறும் வாணலியில் என்னை இல்லாமல் நன்றாக வறுத்து குக்கரில் வேகவிட்டு எடுத்தால் நண்கு வெந்துவிடும். பின் தாளித்து எடுக்கலாம். மிளகாய் தாளிப்பதற்கு பதில் சிறிது மிளகாய் தூள் சேர்த்து தாளிக்கலாம்.

எந்த சுண்டல் செய்தாலும் அதன் மேல் காராபூந்தியை கேரட் துருவல் தூவி கொடுத்தால் கர கர பூந்தி சுண்டல் ஜமாய்க்கும்.

கடலைப் பருப்பை வேகவைத்து வெல்லப் பொடி, தேங்காய் துருவல், ஏலப்பொடி சேர்த்தால் சுவையும் மணமும் கொண்ட இனிப்பு கடலை பருப்பு சுண்டல் தயார்.

இதையும் படியுங்கள்:
உப்பிய பூரியும் மிருதுவான சப்பாத்தியும் செய்ய அனுபவ ஆலோசனை..!
 Variety sundal recipes

எந்த சுண்டல் செய்யும் முன்பு வறுத்துப்பொடித்த காரப்கொடியை தயார் செய்து வைத்துக்கொண்டால் சுண்டல் தாளிக்கும் போது சுலபமாக இருக்கும்.

சுண்டலுடன் சிறிது பொடி செய்த சிப்ஸையும் கலந்தால் பேல் பூரி போல கரகரப்பாக ருசியுடன் இருக்கும்.

எந்த சுண்டல் செய்த பின்னும் வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்க வேண்டும். அதே பாத்திரத்தில் வைத்தால் ஊசிவிடும்.

மாலை பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கும், பள்ளிக்கு ஸ்நாக்ஸாகவும் செய்து கொடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com