
சமையல் ஒரு அற்புதமான கலை. சரியான பொருட்களை, குறிப்பிட்ட நிமிடங்களில், முறையாக சமைத்தால் சுவை அபாரமாக இருக்கும். அதிலும் தக்காளி இல்லாத சமையலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சமையலில் தக்காளியின் இடம் முக்கியமானது. ஆனாலும் சில காய்கறிகளுடன் தக்காளியை சேர்த்து சமைப்பது சரியானது அல்ல. அந்த வகையில் தக்காளியுடன் சேர்த்து சமைக்க கூடாத காய்கறிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பாகற்காய்
பாகற்காயில் தக்காளியை சேர்க்கக்கூடாது என்பது நிபுணர்களின் கருத்து. பாகற்காய் பல வகையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதோடு, நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை அளிக்கிறது. ஆனால் தக்காளியை பாகற்காயில் சேர்க்கும்போது பாகற்காய் சரியாக வேகாது. மேலும் தக்காளியை சேர்ப்பது இந்த கறியை ஒட்டும் தன்மையுடைதாக மாற்றி சுவையைக் கெடுத்து விடுகிறது ஆகவே பாகற்காயோடு தக்காளியை சேர்த்து சமைக்க கூடாது.
இலை கீரைகள்
இலை கீரைகளாக கருதப்படும் கீரை பசலை கீரை, வெந்தயம் ஆகியவற்றில் தக்காளியை சேர்க்கக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். கீரைகளை சமைக்கும்போது நிறைய தண்ணீரை அவை வெளியிடுகின்றன. அத்தகைய கறிகளில் தக்காளியை சேர்ப்பது அவற்றின் நீர்ச் சத்தை மேலும் அதிகரித்து இலை கீரைகளை சாப்பிட்ட உணர்வு கொடுக்காததோடு, அவற்றின் சுவையை கெடுத்துவிடும் என்பதால் இலை கீரைகளில் தக்காளியை சேர்த்து சமைக்க கூடாது.
பூசணிக்காய்
பூசணிக்காய் எப்போதும் புளிப்பாகவும் இனிப்பாகவும் தயாரிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் தக்காளியை சேர்த்து சமைப்பது பூசணிக்காய் கறியில் மேலும் புளிப்பு சுவையை அதிகரித்து கெடுத்துவிடும் என்பதால் பூசணிக்காயுடன் தக்காளியை சேர்க்கக்கூடாது.
வெண்டைக்காய்
வெண்டைக்காய் ஒட்டும் தன்மை கொண்ட காயாக இருப்பதால் இதனுடன் தக்காளி சேர்க்க மேலும் இந்த ஒட்டும் தன்மை அதிகரிக்கும். மேலும் தக்காளியின் புளிப்பும் வெண்டைக்காயின் சுவையும் ஒரு மாறுபட்ட சுவையை உண்டாக்கும் என்பதால் வெண்டைக்காய் கறியில் தக்காளியை சேர்க்காமல் சமைப்பதே சிறந்தது.
எந்த உணவுப்பொருட்களில் தக்காளியை சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும் என தெரிந்து சமைத்தால் நீங்கள் சமையலில் கில்லாடிதான்.