
உருளைக்கிழங்கு - கேரட் - சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பல்சுவை வடை அல்லது போன்டா.
தேவையானவை:
பொடி உருளை - 1/4 கிலோ
காரட் - 1/4 கிலோ
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 200 கிராம்
அாிசி மாவு - 25 கிராம்
கடலைமாவு - 100 கிராம்
ரவா - 10 கிராம்
பொட்டுக்கடலைமாவு - 10 கிராம்
சோள மாவு - 20 கிராம்
பச்சை மிளகாய் - 10 எண்ணிக்கை
நறுக்கிய வெங்காயம் - கொஞ்சம்
இஞ்சி - 2 துண்டு
கொத்தமல்லிதழை - கொஞ்சம்
கடுகு - 1 ஸ்பூன்
பெருங்காயதூள் - கொஞ்சம்
உப்பு - தேவைக்கேற்ப
பொாித்தெடுக்க எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
உருளை, கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு இவைகளை தோல் நீக்கி, நன்கு வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். ரவை மற்றும் மாவுகள் அனைத்தையும் கலந்து, உப்பு பெருங்காயத்தூள், சோ்த்து தண்ணீா்விட்டு நன்கு பிசையவும். பிறகு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி கடுகு தாளித்து, பொடிப்பொடியாய் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் சோ்த்து வதக்கவும். பின்னா் மசித்துவைத்த கிழங்குவகைகள் மற்றும் மாவுகளை போட்டுலேசாக தண்ணீா் தெளித்து கொத்தமல்லி தழை சோ்த்து, இரண்டு பிரட்டு பிரட்டவும். நன்கு பிசைந்து ஆறியபின் வாழை இலையில் எண்ணெய் தடவி, வடைபோலவோ அல்லது போன்டா போலவோ தட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தபின் போட்டு எடுக்கவும்.
மொறு மொறுப்பாக வந்தவுடன் எடுத்து பாிமாறலாம். பொட்டுக்கடலை தேங்காய், கெட்டி சட்னி மற்றும் சாம்பாா் போட்டுக்கொண்டும் சூடாக சாப்பிடலாம். மாலை நேர டிபன் மட்டுமல்ல எந்த நேரத்திலும் சாப்பிடலாம்.