சுவையோடு மனம் மயக்கும் விதவிதமான பொரியல்கள்...

Samayal tips
Samayal tips
Published on

வரைக்காய் பொரியல் செய்யும்போது அத்துடன் சிறிது பால் சேர்த்தால் பொரியல் டேஸ்ட்டாக இருக்கும்.

பாகற்காயை பொடியாக நறுக்கி வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து வதக்கி பொரியல் செய்தால் கசப்பு மட்டுப்படும்.

கத்தரிக்காய் பொரியல் செய்யப்போறீங்களா? கொஞ்சம் கடலை மாவைத்தூவி மூன்று நிமிஷம் கழிச்சு இறக்குங்க. பொரியல் மணம் கம கமவென்று இருக்கும்.

 பொரியலுக்கு தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள் அரிசியை பொன்னிறமாக வறுத்துச் சேர்க்கலாம். சுவையும், மணமும் சூப்பராக இருக்கும்.

முருங்கைக் கீரையையும், வாழைப்பூவையும் சம அளவு எடுத்து பூண்டு, மிளகாய், உப்பு சேர்த்து சுவையான பொரியல் செய்யலாம்.

கோவக்காயை  நறுக்கி சிறிய கிண்ணத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விடவேண்டாம்.

பொரியலுக்குப் போடும் தேங்காய் துருவல் இளசாக இருந்தால் சிறிது வறுத்த பின் பொரியலில் சேர்த்தால் பொரியல் அதிக நேரம் நன்றாக இருக்கும்.

வெண்டைக்காய்  பொரியல் செய்யும்போது வறுத்த வேர்கடலையைப் பொடித்துப்போட்டு வதக்கினால் பொரியலின் டேஸ்டே அலாதிதான்.

எந்த வகை பொரியல் செய்தாலும் பீட்ரூட், கேரட்டைச் சீவி துருவலைக் கலந்து செய்தால் பொரியல் சுவையாக இருக்கும்.

கடலைப் பருப்பை ஊறவைத்து உதிர்த்து அதை வழக்கமாக செய்யும் பாகற்காய் பொரியலில் சேர்த்துக்கிளறினால் பாகற்காயின் கசப்பு குறைந்துவிடும்.

முள்ளங்கியை தோல் சீவி கொப்பரை சீவலில் போட்டுத் துருவினால் பூப்பூவாய் இருக்கும். பொரியல் செய்தால் பார்க்க கோஸ்கறி போல் இருக்கும்.

வாழைத்தண்டு பொரியல் செய்யும்போது ஒரு ஸ்பூன் பச்சரிசி, ஒரு ஸ்பூன் உளுந்து, நான்கு மிளகு, ஒரு மிளகாய் வற்றலை வறுத்துப் பொடி செய்து தூவிக்கிளறி  இறக்கினால் பொரியலின் சுவையும், மணமும் சூப்பராக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஈசியா செய்யக்கூடிய 4 வகை 'வெரைட்டி ரைஸ்'கள்!
Samayal tips

குலோப் ஜாமூன் செய்யும்போது...

 அடை கரகரப்பாக வரவேண்டுமென்றால் பாசிப்பருப்பை அதிகமாக சேர்க்க வேண்டும்.

புளியோதரை செய்யும்போது வறுத்த வேர்க்கடலையை கொஞ்சம் சேர்த்தால் புளியோதரையின் சுவையே அலாதிதான்.

ஆம்லெட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிது சோள மாவு சேர்த்தால் ஆம்லெட் மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.

 சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது, சில துளிகள் எலுமிச்சை சாறுவிட்டால் பாகு முறுகாமல் இருக்கும்.

 குலோப் ஜாமூன் செய்யும்போது உருண்டைகள் உடையாமல் இருக்க, ஜீராபாகு சற்று ஆறிய பின்னர் அதில் போடவேண்டும்.

 உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீரை கீழே விடாமல் அதை உபயோகித்து  சமையல் பாத்திரங்களக் கழுவினால் அவை " பளிச் "சென்று ஆகிவிடும்.

 வாழைப்பூ, வாழைத்தண்டு நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கும்போது அவை கறுத்துவிடாமல் இருக்க சிறிது தயிர் ஊற்றி வைத்தால் போதும்.

 எந்த அரிசியாக இருந்தாலும் 15 நிமிடத்துக்கு குறையாமல் வேகவைத்து, உலையில் வேகவைத்தால், அது வேகும் நேரம் குறையும், எரிபொருள் மிச்சமாகும்.

பணியாரம் செய்யும்போது மாவில் சிறிது ஆப்ப சோடா கலந்தால் பொசு பொசுவென இருக்கும்.ஈசியா செய்யக்கூடிய 4 வகை 'வெரைட்டி ரைஸ்'கள்!

இதையும் படியுங்கள்:
ஈசியா செய்யக்கூடிய 4 வகை 'வெரைட்டி ரைஸ்'கள்!
Samayal tips

பூந்தி செய்யும்போது ஜாரிணியில் (துளைக்கரண்டி) மாவை, வாணலிக்கு அருகில் வைத்து தேய்த்தால் முத்து முத்தாக விழும்.

புதுப்புளியை பாலிதீன் பைகளில் போட்டு வைத்தால் அவை சீக்கிரமாக கறுத்துப் போகாது.

மில்க் மைய்டு சேர்த்து சர்க்கரைப்பொங்கல் செய்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com